உலகளாவிய தங்கத்தின் தேவை, போர் பதற்றங்கள், பங்குச்சந்தை நிலவரம் போன்ற பல காரணங்களால் தங்கத்தின் விலை மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நாள்தோறும் தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் உள்ள நிலையில் கடந்த 10 நாட்களில் தங்கம் ரூ.4,000 வரை உயர்ந்தது. இது சாதாரண ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை இன்று (செப்டம்பர் – 4) ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,795க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.78,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக இன்று (செப்டம்பர் – 4) எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.137க்கும் ஒரு கிலோ ரூ.1,37,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நேற்று (செப்டம்பர் -3) ஒரு சவரன் தங்கம் விலை ரூ,640 உயர்ந்து 78,440க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.9805க்கு விற்பனை செய்யப்பட்டது.