சார்ஜா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு- திருச்சியில் 2 மணிநேரமாக 180 பயணிகள் தவிப்பு

Published On:

| By Mathi

Trichy Air India

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானத்துக்குள்ளேயே 180 பயணிகள் தவித்து வருகின்றனர்.

திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு 180 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று (செப்டம்பர் 3) காலை புறப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட தயாரான நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரனமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதனால் 180-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்துக்குள்ளேயே 2 மணிநேரமாக தத்தளித்து வருகின்றனர். இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share