தங்கம் விலை இன்று (செப்டம்பர் 16) ஒரு சவரன் ரூ.560 உயர்ந்துள்ளது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், போர் பதற்றங்கள், டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று (செப்டம்பர் 16) ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.560 உயர்ந்து ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று (செப்டம்பர் 16) ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.144க்கு உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளி 1,44,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் அமெரிக்கா டாலர் மதிப்பு குறைவு, அமெரிக்காவின் “Treasury Yields” எனப்படும் கருவூல லாப ஈவு வட்டி விகிதங்கள் சரிந்தது, உள்ளிட்ட பல காரணங்களலால் முதலீட்டார்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பி உள்ளது. இந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி கூட்டமும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தங்கத்தின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்ட வாய்ப்புகள் உள்ளன என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.