மீண்டும் சரசரவென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (மார்ச் 24) ஒரு சவரன் தங்கம் ரூ. 2,720 குறைந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 வரை குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய அரசியல் சூழல், போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் நேற்று காலை தங்கம் ஒரு கிராம் ரூ.670 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ. 280 குறைந்தது. ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் சவரனுக்கு ரூ.7600 வரை குறைந்தது. ஆனால் நேற்று மாலை மீண்டும் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.670 உயர்ந்து ரூ. 1,06,720க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 3 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.340 குறைந்து ரூ.13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ. 310 குறைந்து ரூ.10,820க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் நேற்று காலை வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்த நிலையல் மாலையில் மீண்டும் ரூ.15 உயர்ந்தது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10000 குறைந்து ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
23-3-20261,06,720
22-3-20261,08,960
21-3-20261,08,960
20-3-20261,11,600
19-3-20261,11,200
18-3-20261,16,560
17-3-20261,17,200
16-3-20261,17,680
15-3-20261,18,080
14-3-20261,18,080

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

23-3-2026250
22-3-2026250
21-3-2026250
20-3-2026260
19-3-2026265
18-3-2026275
17-3-2026280
16-3-2026276
15-3-2026280
14-3-2026280
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share