சென்னையில் இன்று (மார்ச் 10) ஒரு சவரன் தங்கம் ரூ. 800 உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் 4 நாட்களுக்கு பின்னர் ஒரு கிலோ ரூ.10,000 வரை விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்த நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.110 குறைந்து ரூ.12,890க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி கடந்த 4 நாட்களாக ரூ.290க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 10 உயர்ந்து ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 10,000 வரை உயர்ந்து ரூ. 3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 9-3-2026 | 1,19,600 |
| 8-3-2026 | 1,20,400 |
| 7-3-2026 | 1,20,400 |
| 6-3-2026 | 1,19,680 |
| 5-3-2026 | 1,20,960 |
| 4-3-2026 | 1,21,600 |
| 3-3-2026 | 1,23,720 |
| 2-3-2026 | 1,25,280 |
| 1-3-2026 | 1,26,200 |
| 28-2-2026 | 1,24,400 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 9-3-2026 | 290 |
| 8-3-2026 | 290 |
| 7-3-2026 | 290 |
| 6-3-2026 | 290 |
| 5-3-2026 | 295 |
| 4-3-2026 | 295 |
| 3-3-2026 | 315 |
| 2-3-2026 | 315 |
| 1-3-2026 | 325 |
| 28-2-2026 | 320 |
