படு குஷியில் நகை பிரியர்கள்.. சரசரவென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 18) ஒரு கிராம் ரூ.90 வரை குறைந்துள்ளது. 3 ஆவது நாளாக இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை, போர் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று 3 ஆவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.5000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 90 குறைந்து ரூ.14,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.720 குறைந்து ரூ.1,13,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ. 12,180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
17-2-20261,14,560
16-2-20261,15,520
15-2-20261,16,480
14-2-20261,16,480
13-2-20261,15,200
12-2-20261,16,800
11-2-20261,18,320
10-2-20261,16,640
9-2-20261,17,200
8-2-20261,15,360
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
17-2-2026265
16-2-2026265
15-2-2026280
14-2-2026280
13-2-2026280
12-2-2026300
11-2-2026300
10-2-2026300
9-2-2026300
8-2-2026285
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share