சென்னையில் இன்று (பிப்ரவரி 16) ஒரு கிராம் தங்கம் ரூ.14,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.15,000 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.120 குறைந்து ரூ.14,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.960 குறைந்து ரூ.1,15,520க்கு விற்பனை செய்யப்படுகிறது
மேலும் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.12,350க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.15,000 வரை குறைந்து ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 15-2-2026 | 1,16,480 |
| 14-2-2026 | 1,16,480 |
| 13-2-2026 | 1,15,200 |
| 12-2-2026 | 1,16,800 |
| 11-2-2026 | 1,18,320 |
| 10-2-2026 | 1,16,640 |
| 9-2-2026 | 1,17,200 |
| 8-2-2026 | 1,15,360 |
| 7-2-2026 | 1,15,360 |
| 6-2-2026 | 1,14,000 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 15-2-2026 | 280 |
| 14-2-2026 | 280 |
| 13-2-2026 | 280 |
| 12-2-2026 | 300 |
| 11-2-2026 | 300 |
| 10-2-2026 | 300 |
| 9-2-2026 | 300 |
| 8-2-2026 | 285 |
| 7-2-2026 | 285 |
| 6-2-2026 | 280 |
