IND vs ENG : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை முதன்முறையாக சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி எதிர்கொண்டது. gambhir and gill woried on india team loss
ஹெடிங்லி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் ஜெய்ஸ்வால்(1), சுப்மன் கில்(1), ரிஷப் பண்ட்(2), கே.எல்.ராகுல்(1) என 5 சதங்களுடன் வலுவான பேட்டிங்குடன் இந்திய அணி 371 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. எனினும் கடைசி நாளில் இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியைச் சேர்ந்த வீரர்கள் 5 சதமடித்தும் அந்த அணி தோற்பது இதுவே முதல்முறை.
இதுகுறித்து போட்டி முடிந்த பின்னர் பேசிய கேப்டன் சுப்மன் கில், “இந்திய அணியின் இந்த தோல்விக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது. ஒன்று இரண்டு இன்னிங்ஸ்களிலும் முக்கியமான கேட்சுகளை தவறவிட்டது. மற்றொன்று, டாப் வரிசை வீரர்கள் பிரகாசித்தாலும், கீழ் வரிசை வீரர்கள் போராடாமல் ஆட்டமிழந்தது” என்று வேதனை தெரிவித்தார்.
பத்து கேட்ச் மிஸ்ஸிங்!
அவர் கூறியபடி, இந்திய அணி வீரர்கள் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 10 கேட்ச்களை தவறவிட்டனர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய துணை புரிந்த பென் டக்கெட், ஓலி போப், ஹாரி புரூக் மற்றும் மீண்டும் டக்கெட் என யஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்கு கேட்சுகளை தவறவிட்டார்.
இதனால் மேலே குறிப்பிட்ட நான்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் 165 ரன்கள் அதிகமாக எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட்: 11 ரன்களில் கேட்ச் கண்டத்திலிருந்து தப்பினார். 62 ரன்கள் எடுத்தார்.
ஓல்லி போப்: 60 ரன்களில் தப்பினார். 106 ரன்கள் எடுத்தார்
ஹாரி புரூக்: 83 ரன்களில் தப்பினார். 99 ரன்கள் எடுத்தார்
இரண்டாவது இன்னிங்ஸில் பென் டக்கெட்: 97 ரன்களில் தப்பினார். 149 ரன்கள் எடுத்தார்
இந்தியாவின் பேட்டிங் சரிவு!
அதே போன்று, இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து இந்திய அணி முதல் டாப் 5 பேட்ஸ்மேன்கள் ஐந்து சதங்கள் மூலம் 721 ரன்கள் குவித்தனர். ஆனால் மீதமுள்ள 6 பேர் வெறும் 65 ரன்கள் மட்டுமே அடித்தனர். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இழந்தது..
முதல் இன்னிங்ஸ்: 430/3 என்ற நிலையில் இருந்து 471 வரை ஆல் அவுட் – 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள்
2வது இன்னிங்ஸ்: 333/4 என்ற நிலையில் இருந்து 364 வரை ஆல் அவுட் – 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள்
இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறுகையில், “உண்மையில் பேட்டிங் பார்வையில் இது ஏமாற்றமளிக்கிறது, முதல் இன்னிங்ஸில் சுமார் 600 ரன்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்தபோது, நாங்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கக்கூடிய சூழ்நிலையில் இருந்தோம். எனினும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாம் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், இந்த டெஸ்ட் போட்டியில் 5 நாட்களிலும் நாங்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தன” எனத் தெரிவித்தார்.
மு
இருப்பினும், இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பறிக்கப்படாத கேட்சுகளுக்காக அணியைப் பாதுகாத்தார். “கேட்சுகள் தவறவிடப்படுவது வழக்கம்தான். சிறந்த ஃபீல்டர்கள் கேட்சுகளைத் தவறவிட்டிருக்கிறார்கள். அவர்களில் யாரும் வேண்டுமென்றே அதைச் செய்யவில்லை,” என்று கம்பீர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில்
ஹெடிங்லியில் நடந்த டெஸ்டில் இந்தியா 10 கேட்சுகளை இழந்தது, இது நவம்பர் 2011 க்குப் பிறகு ஆண்கள் டெஸ்டில் அதிகபட்சம் (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 10 டிராப்கள்). இது அவர்களின் கடைசி ஆறு டெஸ்ட் போட்டிகளின் கூட்டு எண்ணிக்கையாகும்.