காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் ஜிகே மணி மகன் தமிழ்க்குமரன்

Published On:

| By Mathi

Tamilkumaran Congress (1)

காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன், காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் களம் காண்கிறார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச்செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் அக்கட்சியில் இன்று மார்ச் 28-ந் தேதி தமிழ்க்குமரன் இணைந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழ்க் குமரன் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

தமிழ்க்குமரனின் தந்தை ஜி.கே.மணி தற்போது பென்னாகரம் தொகுதி பாமக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சி பென்னாகரம் தொகுதியை தமிழ்க் குமரனுக்காக திமுகவிடம் கேட்டு வாங்கும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

2006-ம் ஆண்டு ஜிகே மணி மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2011 தேர்தலில் மேட்டூர் தொகுதியில் ஜிகே மணி தோல்வியைத் தழுவினார். தற்போது மேட்டூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பாமகவின் சதாசிவம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share