சென்னையில் நாள் முழுவதும் மழை :வெதர்மேன் பிரதீப் ஜான்

Published On:

| By Kavi

சென்னையில் இன்று (அக்டோபர் 27) நாள் முழுவதும் மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

வங்கக் கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது. இது சென்னையில் இருந்து 560 கிமீ தூரத்திலிருந்து 15கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் மழை நிலவரம் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், ‘மோந்தா புயலின் வெளிப்புற மேற்குப் பகுதிகள் சென்னையைத் தொடுகின்றன. இதனால் நாள் முழுவதும் தூறல், லேசான மழை, மிதமான மழை மற்றும் அவ்வப்போது தீவிரமான மழை தொடரும். வடசென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்சென்னையில் மழைப்பொழிவு வடசென்னையுடன் ஒப்பிடும்போது சற்றுக் குறைவாக இருக்கும்.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் பழவேற்காடு போன்ற பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய நிலை எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share