ADVERTISEMENT

நிதி முறைகேடு: இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஜாமீனில் விடுதலை

Published On:

| By Mathi

Ranil Arrest Srilanka

அரசு நிதி முறைகேடு விவகாரத்தில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே (Ranil Wickremesinghe) இன்று (ஆகஸ்ட் 22) அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் ரணில் விக்கிரமசிங்கே விடுதலை செய்யப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்கே தமது பதவி காலத்தில் (2022-2024) அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதில் இங்கிலாந்து பயணத்தை தனிப்பட்ட முறையில் ரணில் விக்கிரமசிங்கே மேற்கொண்டதாகவும் இதற்காக அரசு நிதி ரூ4.97 கோடியை (இந்திய மதிப்பு) முறைகேடாக பயன்படுத்தினார் என்பதும் குற்றச்சாட்டு.

ADVERTISEMENT

இது தொடர்பாக ரணிலின் செயலாளர்களாக இருந்த சமன் ஏகநாயக்க, சாண்ட்ரா பெரோரா ஆகியோர் ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த விசாரணைக்கு ஆஜரான நிலையில் ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றம், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஜாமீன் வழங்கியதால் விடுதலை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share