எஸ்சி/எஸ்டி வழக்கு : முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் விடுவிப்பு!

Published On:

| By Kavi

Thilagavathi daughter-in-law released

பணிப்பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் விடுவிக்கப்பட்டுள்ளார். Thilagavathi daughter-in-law released

சேலத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுருதி. இவருக்கும் முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக்கிற்கும் 2007ஆம் ஆண்டு சேலத்தில் திருமணம் நடைபெற்றது .  இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.  மருத்துவரான பிரபு திலக் தன்னுடன் மருத்துவராகப் பணியாற்றிய இந்திரா பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் நெருக்கமாகப் பழகி வந்ததாகவும், இதனை தட்டிக் கேட்டதால் பிரபு திலக் சுருதியை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்தசூழலில் 2022ஆம் ஆண்டு சுருதி சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.  அதில்,  “என் திருமணத்தின் போது  வரதட்சணையாக ஒரு கோடி ரூபாய் ரொக்கமும், 170 சவரன் நகையும் என் தந்தை வழங்கியிருந்தார். என் கணவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்புள்ளது.  தினமும் மது அருந்திவிட்டு என்னை அடித்து சித்ரவதை செய்கிறார்.  என் கணவரின் அம்மா முன்னாள் டிஜிபி என்பதால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி என்னை மிரட்டுகின்றனர்” என்றெல்லாம் தனது புகாரில் தெரிவித்திருந்தார். 

ஆனால் இந்தப் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை சுருதி நாடினார். இதனையடுத்து சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய திருமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி திருமங்கலம் போலீசார் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் 2022 ஆம் ஆண்டு தமது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் சபீனாவை அவரது சாதிப் பெயரைக் கூறி சுருதி திட்டியதாக கூறப்பட்டது .

இதுதொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. 

அதில் சுருதி மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கிற்கு தேவையான ஆதாரங்கள் போதிய அளவில் இல்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து  அவரை  நீதிமன்றம் விடுவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஐபிசி 294(b) மற்றும் 506(ii)  மற்றும் எஸ்சி.எஸ்டி(வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989 பிரிவுகள் 3(i)(r) மற்றும் 3(i)(s) ஆகியவற்றின் கீழ் குற்றவாளி அல்ல என்று கண்டறியப்பட்டு, அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தொழில் நடத்தை விதிகளை மீறிய புகாரில் பெண் வழக்கறிஞர் சுருதி திலக் மீது  2024ஆம் ஆண்டு பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. சுருதி வழக்கறிஞர் பணி செய்ய ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Thilagavathi daughter-in-law released

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share