தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கைவண்ணத்தில் உருவான பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் உணவுத் திருவிழா சென்னை பெசன்ட் நகரில் இன்று (டிசம்பர் 21) மாலை தொடங்குகிறது.
சென்னை பெசன்ட் நகர் கடற்க்ரையில் இன்று மாலை முதல் டிசம்பர் 24-ந் தேதி புதன்கிழமை வரை உணவுத் திருவிழா நடைபெறும்.

நாள்தோறும் பகல் 12 மணி முதல் இரவு 9.00 மணி வரை உணவுத் திருவிழாவில் பல்வேறு வகை உணவுகள் கிடைக்கும்.
இத்திருவிழாவில், மொத்தம் 190-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெறுகின்றன.
மேலும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இந்த உணவுத் திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் ஏதுமில்லை.
அத்துடன் உணவுத் திருவிழாவில் மகளிர் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்களை எவ்வாறு களைவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
உணவுத் திருவிழாவில், கொங்கு மட்டன் பிரியாணி, பள்ளிபாளையம் சிக்கன்
மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், பொறிச்ச புரோட்டா, தூத்துக்குடி, இலங்கை யாழ் உணவுகள் மற்றும் சென்னையின் விதவிதமான மீன் உணவுகள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.
இதில், ”No Oil, No Boil” (எண்ணெய் இல்லா, வேகவைக்காத) முறையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய உணவுகள், கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பாரம்பரிய திண்பண்டங்களுக்காகத் தனியே 12 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
