சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு (இலங்கை) புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. Chennai to Colombo Flight
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 126 பயணிகளுடன் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் இன்று ஜூலை 13-ந் தேதி கொழும்புக்கு புறப்பட்டது.
இந்த விமானம் ஓடுபாதைக்கு கொண்டு வரப்பட்ட போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்தார் விமானி. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது.
பின்னர் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
முன்னதாக ஜூலை 12-ந் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு 217 பயணிகளுடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்திலும், விமானம் ஓடு பாதைக்கு செல்வதற்கு முன்னர் இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
