திரைப்பட இயக்குநர் வீ.சேகர் காலமானார்

Published On:

| By Mathi

Director V Sekar

திரைப்படத்துறையில் மூத்த இயக்குநர் வீ.சேகர் (வயது 72) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

நடுத்தர மக்களின் வாழ்வியலை நகைச்சுவையாகவும் மிக யதார்த்தமாகவும் படமாக்கியவர் இயக்குநர் வீ. சேகர்.

ADVERTISEMENT

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று நவம்பர் 14-ந் தேதி அவர் காலமானார்.

1990 ஆம் ஆண்டு “நீங்களும் ஹீரோதான்” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வீ. சேகர்.”வரவு எட்டணா செலவு பத்தணா”, “காலம் மாறிப் போச்சு”, “நான் பெத்த மகனே”, “விரலுக்கேத்த வீக்கம்”, மற்றும் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” ஆகிய படங்களை இயக்கினார்.

ADVERTISEMENT

இயக்குநர் வீ.சேகர் மறைவுக்கு திரையுலகத்தினரும் அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share