ADVERTISEMENT

FASTag – ஆண்டு சந்தா : எவ்வளவு? எப்போது முதல் அறிமுகம்?

Published On:

| By Kavi

fastag annual pass

வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கு ரூ.3,000 விலையில் FASTag அடிப்படையிலான வருடாந்திர அட்டையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. fastag annual pass

அந்தவகையில் ஆண்டுக்கு 3000 கட்டணம் செலுத்தி, இந்த அட்டை மூலம் ஆண்டுக்கு 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து பயணம் மேற்கொள்ளலாம். ஓராண்டு வரை இந்த அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஓராண்டுக்குள் 200 டிரிப்புகளை முடித்துவிட்டால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.  ஒரு சுங்க சாவடியை வாகனம் கடந்து சென்று விட்டால் அது ஒரு பயணம் என கணக்கில் கொள்ளப்படும்.

ADVERTISEMENT

 கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிகம் சாராத தனியார் வாகனங்களுக்காக இந்த பாஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த நடைமுறை, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை மேற்கொள்ள உதவும். ஆகஸ்ட் 15 முதல் இந்த அட்டை வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

ADVERTISEMENT

இந்த அட்டையை எப்படி பெறுவது? 

 ராஜ்மார்க் யாத்ரா செயலி, இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகம் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கொடுக்கப்படும் லிங்க் மூலம் இந்த புதிய பாஸ்ட்டேக் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். 

ADVERTISEMENT

அதன்படி, 

உங்கள் பதிவுசெய்யப்பட்ட FASTag சான்றுகளைப் பயன்படுத்தி  உள்நுழைய வேண்டும். 

உங்கள் வாகனப் பதிவு விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

யுபிஐ, கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ரூ.3,000 செலுத்த வேண்டும்

பணம் செலுத்திய பிறகு, உங்கள் FASTag வருடாந்திர பாஸுடன் தானாக இணைக்கப்படும்.

இதையடுத்து 24 மணி நேரத்திற்குள் அந்த அட்டை செயல்பாட்டுக்கு வரும் . fastag annual pass

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share