“COVID-19 உடலை பிரேத பரிசோதனை செய்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது; COVID-19 ஒரு வைரஸாக இல்லை, மாறாக கதிர்வீச்சுக்கு ஆளாகி இரத்தத்தில் உறைந்து மனித மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியாவாக இருப்பது கண்டறியப்பட்டது” என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையானது அல்ல என தெரியவந்துள்ளது. Fact Check on Singapore Autopsy on a COVID-19 Patient
தெற்காசிய நாடுகளில் சிங்கப்பூரிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா கால வழிகாட்டுதல்களைப் பின்பற்ற சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், “COVID-19 உடலை பிரேத பரிசோதனை செய்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு, COVID-19 ஒரு வைரஸாக இல்லை, மாறாக கதிர்வீச்சுக்கு ஆளாகி இரத்தத்தில் உறைந்து மனித மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியாவாக இருப்பது கண்டறியப்பட்டது. COVID-19 நோய் இரத்தக் கட்டிகளை ஏற்படுத்துகிறது, இது மனிதர்களில் இரத்தக் கட்டிகளுக்கு வழிவகுக்கிறது, மேலும் நரம்புகளில் இரத்தம் உறைந்து, ஒரு நபர் சுவாசிக்க கடினமாகிறது; ஏனெனில் மூளை, இதயம் மற்றும் நுரையீரல் ஆக்ஸிஜனைப் பெற முடியாது, இதனால் மக்கள் விரைவாக இறக்கின்றனர்” என்பது உள்ளிட்ட தகவல்களுடன் சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை.

இதேபோன்ற செய்தி 4 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா உக்கிரமாக இருந்த காலத்திலும் பரவியது. அப்போதே சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் இதனை திட்டவட்டமாக மறுத்தது. தற்போது மீண்டும் அதே தகவல் சமூக வலைதளங்களில் மீண்டும் பரப்பிவிடப்படுகிறது.
Claim
கொரோனா வைரஸால் உயிரிழந்த நபரின் உடலை சிங்கப்பூர் அரசு பிரேத பரிசோதனை செய்தது; இதில் அந்த நபர் உயிரிழக்க கொரோனா வைரஸ் காரணம் அல்ல; ஒரு வகை பாக்டீரியாதான் காரணம்
Fact
இது உண்மை அல்ல. 4 ஆண்டுகளுக்கு முன்னரே இதே செய்தி பரவியது. அப்போதே சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் இதனை மறுத்தது.
Rating
False