தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1996 முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் வரும் 12.8.2025 வரை ஆசிரியர்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. PG Teachers
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்களுக்கான அறிக்கை (எண் 02/2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் www.trb.tn.gov.in வாயிலாக இன்று(10.07.2025) வெளியிடப்படுகிறது.

பாட வாரியான காலிப்பணி இடங்களின் விபரங்கள்: தமிழ் – 216, ஆங்கிலம் – 197, கணிதம் – 232, இயற்பியல் – 233, வேதியியல் – 217, தாவரவியல் – 147, விலங்கியல் – 131, வணிகவியல் 198, பொருளியல் – 169, வரலாறு – 68, புவியியல் – 15, அரசியல் அறிவியல் – 14, கணினி பயிற்றுநர் நிலை I – 57, உடற்கல்வி இயக்குநர் நிலை I -102, என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வற்கான அனைத்து விவரங்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் 12.08.2025 பிற்பகல் 5 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலான விண்ணப்பிக்கும் போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.