‘மாஜி அதிமுகவினர்’ ஆதிக்கம்.. பரம்பரை திமுககாரன் கதி என்ன? குமுறும் தொண்டர்கள்

Published On:

| By Mathi

OPS DMK Reaction

அதிமுகவில் இருந்து விலகி இணைவோர் பெருமளவு திமுகவில் ஆதிக்கம் செலுத்துவதால் பரம்பரையாக திமுகவுக்கே உழைத்து கொண்டிருக்கிற உண்மை கட்சிக்காரர்கள் ஓரம்கட்டப்படுகிற அவலநிலை இருப்பதாக சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்கள் குமுறலைக் கொட்டி வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்தார். இதனை ஒட்டி சமூக வலைதளங்களில் திமுகவினர் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சைதை மா. அன்பரசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது: வர்றவங்க எல்லாம் வாங்க.. நாடும் மொழியும் மக்களும் நாளைய தலைமுறையும் நல்லா இருக்கணும்னா திமுகவை விட்டா வேற நாதியில்லை! இதை நாங்க உணர்ந்ததால்தான் பரம்பரை பரம்பரையாக இந்த கட்சியில் உழைச்சிகிட்டு இருக்கோம்.

இது தெரியாமல்தான் நீங்க திமுக தீயசக்தி… இதை ஒழிச்சே தீரணும்னு கோமணத்த இறுக்கக்கட்டி வேலை பார்த்தீங்க. என்ன செஞ்சாலும் திமுகவை ஒழிக்க முடியல… அதனால நீங்க உங்க பிழைப்புக்காக இங்க வர்றீங்க. வர்றதில தப்பில்ல…

ADVERTISEMENT

ஆனா, வர்ற நீங்க, கால காலமா இந்த கட்சியை உயிரா நினைச்சி உழைச்சி வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குற தொண்டர்களை கீழே தள்ளி விட்றாதீங்க…

அவங்களுக்கு இந்த கட்சியைத் தவிர வேற எதுவும் தெரியாது. உங்கள மாதிரி சுயநலத்துக்காக சொந்த கட்சிக்கு துரோகம் பண்ணிட்டு வேற எங்கயும் போகவும் மாட்டாங்க!

ADVERTISEMENT

எதுக்கு சொல்றேன்…னா அற்ற குளத்து அருநீர்ப் பறவைகளாக மாறி இங்கே வருகிறவனுக்கெல்லாம் ஒதுங்கி வழிவிட்டு வழிவிட்டு இப்போ வந்தவன் யாரு? கட்சியை வளர்த்தவன் யாருன்னு தெரியாத அளவுக்கு வந்தவனோட ஆதிக்கம் வலுத்துப் போயி, சொந்தக் கட்சிக்காரன் சோகமா மனசொடிஞ்சி நிக்குறான்.

இன்னமும் இறங்கிப் போகணும்னா… வேற வழியில்ல… அவன் இறந்துதான் போகணும்!

அப்படியே செத்தாலும் அவனுக்கு மிஞ்சுவது அவன் பிணத்தின் மீது போடுகிற கருப்பு சிவப்பு கொடி மட்டுந்தான்… இவ்வாறு சைதை மா. அன்பரசன் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் திமுகவினர் பதிவிட்டுள்ளதாவது:

Philip Chelladurai: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சின்னத்தில் அதிகம் போட்டிடுவோர் அதிமுகவின் வேட்பாளராக தான் இருப்பார்கள் போல. அதிலும் மீண்டும் ஆட்சி அமைத்தால் முதல்வரை தவிர அமைச்சர்கள் அனைவரும் அதிமுகவின் அமைச்சரவையாக இருக்கும் போல. எப்படி ஆர் எஸ் எஸ் காங்கிரஸ் கட்டமைப்பிற்குல் புகுந்து பல பொறுப்புகளை கைப்பற்றி மீண்டும் அவர்கள் எல்லாம் வெளியேறி பாஜகவில் இணைந்து காங்கிரசை ஒன்றும் இல்லாமல் செய்தார்களோ அதே பாதையில் தான் தமிழகத்தில் திமுக பயணிக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து . அனைவரும் வந்து இணைவது தற்பொழுது வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் இது கேடு விளைவிக்கலாம். இந்த அரசியல் புரிந்தவர்களுக்கு புரியும் புரியாதவர்களுக்கு மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் ஏற்படுத்தும்.

Elingesha Ame: சரியா சொன்னீங்க.கட்சி வளத்தவனெல்லாம் பரம்பரை தி.மு.க காரன்.பதவி அதிகாரமெல்லாம் வந்தன் போனவன் கையில்.

மருத்துவர் ஆலத்தூர் மு.அகிலன்: உண்மையான திமுக தொண்டனின் உள்ள குமுறல்களை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு நன்றி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share