”சனாதன தர்மத்தை” ஒழிப்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது, “இனப்படுகொலையை” குறிப்பதுதான் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் 2023-ம் ஆண்டு தமுஎகச நடத்திய மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, ’சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும்’ என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு, ‘சனாதனிகளை இனப்படுகொலை செய்ய தூண்டும் பேச்சு’ என பாஜகவின் அமித்மாளவியா சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக திருச்சி தெற்கு, திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கேஏவி தினகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமித் மாளவியா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அமித் மாளவியா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, அமித்மாளவியா மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அமித் மாளவியா வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்த கருத்துகள்:
- சனாதன தர்மம் ஒழிப்பு எனில் சனாதன தர்மம் இருக்கக் கூடாது; சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பது அர்த்தம்.
- சனாதனத்தை பின்பற்றும் மக்கள் இருக்கக் கூடாது எனில் அது இனப்படுகொலையைக் (genocide) குறிக்கிறது.
- சனாதனம் ஒரு மதம் எனில் மதப் படுகொலையை (Religicide) தூண்டுவதாகும்.
- சனாதன ஒழிப்பு என்பது இனப்படுகொலை- கலாசார படுகொலையைத்தான் குறிக்கிறது
- இதனால் உதயநிதியின் பேச்சை மனுதாரர் அமித் மாளவியா கேள்விக்குள்ளாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டது அவதூறு இல்லை.
- உதயநிதி ஸ்டாலினின் வெறுப்பு பேச்சுக்கான எதிர்வினைதான் அமித் மாளவியாவின் சமூக வலைதளப் பதிவாகும்.
- தமிழகத்தில் இந்து மதத்தினர் மற்றும் ஜாதி இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.
- குடுமியை வெட்டுவது, பூணூலை அறுப்பது, பன்றிகளுக்குப் பூணூல் அணிவிப்பது ஆகியவை இந்து மதத்துக்கும், ஜாதி இந்துக்களுக்கும் எதிரான தாக்குதல் சம்பவங்கள். இவை தமிழ்நாட்டில் நடந்துள்ளன.
- ராமர், விநாயகருக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்தார்; விநாயகர் சிலைகளை உடைத்தார்; இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- 100 ஆண்டுகளாக, திராவிடர் கழகம், உதயநிதி ஸ்டாலினின் திமுகவினர் இந்து மதத்தின் மீது ஒரு தெளிவான தாக்குதல் நடத்துகின்றனர்.
- உதயநிதி ஸ்டாலினின் பேச்சு 80% இந்துக்களுக்கு எதிரானது; வெறுப்புப் பேச்சு.
- சனாதனியான மனுதாரர், வெறுப்புப் பேச்சால் பாதிக்கப்பட்டவர்; சனாதன தர்மத்தை பாதுகாத்தவர். உதயநிதியின் பேச்சுக்கு பதிலளித்த மனுதாரர் மீது சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது.
- மனுதாரர் அமித்மாளவியா மீதான வழக்கு பிரிவுகள் அனைத்துமே உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்குதான் பொருந்தும்.
- வெறுப்புப் பேச்சை பேசுபவர்கள் தண்டனை இல்லாமல் விடுவிக்கப்படுகின்றனர்; இதற்கு எதிராக செயல்பட்டால் சட்டத்தின் கோபத்துக்குள்ளாகும் நிலை வேதனை தருகிறது.
- வெறுப்பு பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது எந்த வழக்கும் இங்கே பதிவு செய்யவில்லை; பிற மாநிலங்களில்தான் வழக்குகள் பதிவாகி உள்ளன.
- அரசு தரப்பு தெரிவிப்பது போல மகாத்மா காந்தி, சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியவர் இல்லை. அவர் ஒரு சனாதன இந்து என அறிவித்தவர்.
- காமராஜரும் சனாதனத்துக்கு எதிரானவர் இல்லை; அவர் தீவிர இந்து பக்தர்; முருகன் பக்திப் பாடல்களைப் பாடுகிறவர்.
- புத்தர் இந்து குடும்பத்தில் பிறந்தவர்; வேதகால நடைமுறைகளை மட்டுமே எதிர்த்தார்; அவர் ஆன்மிகப் பாதையின் மிக உயர்ந்த வடிவத்தை போதித்தார்; மதம் சார்ந்த தியான முறையை முன்வைத்தவர்; புத்தரும் சனாதன தர்மத்துக்கு எதிரானவர் அல்ல.
- ராமானுஜர், விசிஷ்டாத்வைத தத்துவத்தின் ஆதரவாளர். ஓம் நமோ நாராயணாய என்ற இந்து மந்திரத்தை உச்சரித்து சனாதன தர்மத்தின் தூணாக இருந்தவர்.
- சைவ சமயத்தைச் சேர்ந்த வள்ளலார், விலங்கு வதையை எதிர்த்தார்; கருணைக்கு முதன்மை கொடுத்தார்; அவர் சனாதன எதிர்ப்பாளர் இல்லை; முக்தி அடைய சனாதன தர்மத்தைப் பின்பற்ற சொன்னவர் வள்ளலார்.
- பெரியார் மட்டுமே சனாதன தர்மத்தை எதிர்த்தவர்.
- பாஜக சனாதனம் பற்றி பேசுவதால் உதயநிதியும் பேசினார் என காவல்துறை மனுத் தாக்கல் செய்திருப்பது அரசியல் சார்பாகும்; விசாரணை அதிகாரி இப்படிப்பட்ட மனுவை தாக்கல் செய்திருக்கக் கூடாது.
- இதனால் அமித் மாளவியா மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
நீதிபதி ஸ்ரீமதி அளித்த தீர்ப்பு முழுமையாக
