ENG VS ind : முதல் டெஸ்ட் போட்டியை எதில், எப்போது பார்க்கலாம்? – முழு விவரம்!

Published On:

| By christopher

ENG VS IND 1st test match live report

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (ஜூன் 20) தொடங்கவுள்ளது. தொடரின் வெற்றி கோப்பைக்கு ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. ENG VS IND 1st test match live report

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் முதன்முறையாக சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. மேலும் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி விளையாடும் முதல் தொடராகும்.

இரு அணிகள் இடையேயான் முதல் போட்டியானது நாளை முதல் 24 வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்குத் துவங்கி, இரவு 10:30 மணிக்கு முடியும்.

இந்தியாவில் இந்தப் போட்டியை இணையதளம் மற்றும் மொபைலில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம். தொலைக்காட்சியில் நேரலையானது சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Sony Sports Network) சேனலில் ஒளிபரப்பாகும்.

முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் போட்டி தொடங்கும் முன் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share