ADVERTISEMENT

எலான் மஸ்க் மகனுக்கு ஒரு தமிழரின் பெயரா? – ‘சேகர்’ என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் ‘விஞ்ஞான’ ரகசியம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

elon musk names son sekhar after nobel laureates chandrasekhar shivon zilis

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பத் துடிக்கும் ‘டெக் அசுரன்’ எலான் மஸ்க் (Elon Musk), எப்போதுமே தனது அதிரடி நடவடிக்கைகளால் உலகையே திரும்பிப் பார்க்க வைப்பவர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), எக்ஸ் (ட்விட்டர்) எனத் தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை ஆளும் மஸ்க், தற்போது இந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ஒரு நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

பிரபல இந்தியத் தொழிலதிபர் நிகில் காமத் (Nikhil Kamath) உடனான பிரத்யேக ‘பாட்காஸ்ட்’ (Podcast) நேர்காணலில் மஸ்க் பேசிய சில விஷயங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ADVERTISEMENT

ஷிவோன் ஜிலிஸ் ஒருபாதி இந்தியர்‘! எலான் மஸ்க்கின் மூளை – கணினி தொழில்நுட்ப நிறுவனமான நியூராலிங்கில் (Neuralink) உயர் அதிகாரியாகப் பணிபுரிபவர் ஷிவோன் ஜிலிஸ் (Shivon Zilis). இவருக்கும் எலான் மஸ்க்கிற்கும் பிறந்த குழந்தைகள் பற்றிப் பேசும்போது, ஷிவோனின் பூர்வீகம் குறித்த ஒரு ஆச்சரியமான தகவலை மஸ்க் வெளியிட்டார்.

“ஷிவோன் கனடாவில் வளர்ந்தவர் என்றாலும், அவர் ஒரு பாதி இந்தியர் (Half-Indian). அவரது தந்தை ஒரு இந்தியராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஷிவோன் குழந்தையாக இருக்கும்போதே தத்து கொடுக்கப்பட்டுவிட்டார்,” என்று மஸ்க் கூறியுள்ளார். இது பலருக்கும் தெரியாத ஒரு புதிய தகவல்.

ADVERTISEMENT

மகனுக்குச் சூட்டப்பட்ட தமிழர் பெயர்! இதைவிட ஒரு படி மேலே போய், மஸ்க் சொன்ன அடுத்த விஷயம் தான் ஹைலைட். ஷிவோன் ஜிலிஸ் மூலம் தனக்குப் பிறந்த குழந்தைகளில் ஒரு மகனுக்கு, சேகர்” (Sekhar) என்று ‘மிடில் நேம்’ (Middle Name) வைத்துள்ளாராம் மஸ்க்.

ஒரு அமெரிக்கப் பணக்காரர் எதற்காகத் தன் மகனுக்கு ‘சேகர்’ என்று பெயர் வைக்க வேண்டும்? சும்மா ஸ்டைலுக்காக இந்தப் பெயரை அவர் வைக்கவில்லை. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர் (S. Chandrasekhar) மீது கொண்ட அளவற்ற மரியாதையின் காரணமாகவே இந்தப் பெயரைச் சூட்டியுள்ளார்.

ADVERTISEMENT

யார் இந்த சந்திரசேகர்? 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், நம் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். “நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சி மற்றும் அமைப்பு” (Evolution of Stars) பற்றிய இவரது ஆய்வுதான் இன்றும் விண்வெளி அறிவியலின் அடிப்படை என்று சொன்னால் மிகையாகாது.

விண்வெளி ஆய்வில் தீராத காதல் கொண்ட மஸ்க், தனது ரோல் மாடலாகக் கருதும் ஒரு தமிழரின் பெயரைத் தன் மகனுக்குச் சூட்டியிருப்பது ஆச்சரியம் கலந்த பெருமை.

குழந்தைகள் விவரம்: எலான் மஸ்க் மற்றும் ஷிவோன் ஜிலிஸ் இருவருக்கும் மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். இரட்டையர்களான ஸ்ட்ரைடர் மற்றும் அஸூர், மகள் ஆர்கேடியா மற்றும் மகன் செல்டன். இவர்களில் ஒருவருடைய பெயரில்தான் “சேகர்” என்ற பெயர் இணைந்திருக்கிறது.

டெஸ்லா கார் இந்தியாவிற்கு வருகிறதோ இல்லையோ, எலான் மஸ்க் தன் குடும்ப பெயரிலேயே இந்தியாவை, அதுவும் ஒரு தமிழரின் பெயரை இணைத்துவிட்டார் என்று நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர். அறிவியல் எல்லைகள் அற்றது என்பதற்கு இதுவே சிறந்த சான்று!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share