டிரம்ப்புக்கு ஆப்பு? புதிய அரசியல் கட்சியை அறிவித்த எலான் மஸ்க்!

Published On:

| By Mathi

America Party

அமெரிக்கா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ‘ அமெரிக்க பார்ட்டி’ -America Party என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளார் எலான் மஸ்க். Elon Musk launches ‘America Party’
உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர், அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை ஆதரித்தார் எலான் மஸ்க்.

டொனால்ட் டிரம்ப் அதிபரான பின்னர், அரசின் திறனுக்கான துறை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் தலைவராகவும் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப்- எலான் மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகவும் கடுமையாகவும் விமர்சித்துக் கொண்டனர்.

இந்த நிலையில் ‘அமெரிக்கா பார்ட்டி’- America Party என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை இடையேதான் போட்டி நிலவும். இரு கட்சிகளில் ஒன்றைச் சேர்ந்தவரே அதிபராக பதவி வகித்து வருகின்றனர். தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

முன்னதாக எலான் மஸ்க், புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து சமூக வலைதளங்களில் மக்களின் கருத்துகளை கேட்டார். எலான் மஸ்க்கின் இந்த புதிய கட்சி, டொனால்ட் டிரம்ப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share