தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு இன்று பிப்ரவரி 15-ந் தேதி சென்னையில் நடைபெற்றது.
அனைத்துலக வள்ளலார் மாநாட்டை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்
வள்ளலார் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 8 அறிவிப்புகள்:
- அனைத்துலக வள்ளலார் மாநாட்டின் நினைவாக காஞ்சி ஏகாம்பரநாதர் பள்ளியில் நினைவுத்தூண் அமைக்கப்படும்.
- வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டு, அப்பள்ளியில் திருவருட்பா இசை பயிற்சியும் அளிக்கப்படும்.
- வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்.
- ‘Spiritual Alchemy’ என்ற வள்ளலாரின் புத்தகம் அறநிலையத்துறையின் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும்.
- வள்ளலார் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் 3 நாட்கள் விழா நடத்தப்படும்.
- மேட்டுக்குப்பம், மருதூர் மற்றும் கருங்குழி ஆகிய ஊர்களில் வள்ளலார் பெயரில் அன்னதான கூடங்கள் திறக்கப்படும்.
- கடலூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் அமைய உள்ள பூங்காவிற்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும். சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை வள்ளலார் நெடுஞ்சாலை என அழைக்கப்படும்.
- சென்னையில் அறநிலையத்துறை வளாகத்தில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும்.
