ADVERTISEMENT

ஆணை விமர்சிக்க பெண்ணை இழிவுப்படுத்துவதா? நயினாருக்கு கனிமொழி எம்.பி.கண்டனம்!

Published On:

| By Kavi

விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,  “முதலில் அவர் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். முக்கியமாக திரிஷாவிடமிருந்து முதலில் வெளியே வர வேண்டும்” என்று முகம் சுழிக்கும் வகையில் பேசியிருந்தார். 

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்தசூழலில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,  “ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். தமிழ்நாடு பாஜக தலைவரின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

முன்னதாக தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி சோமு ஆகியோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share