கோழி முட்டை விலை 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் 1 முட்டை ரூ.7 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது.
2022 ஜூன் மாதம் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு, நாமக்கல் வரலாற்றில் அதிகபட்சம் எனக் கருதப்பட்டது. இது 2023 ஜனவரியில் ரூ. 5.65 ஆக இருந்தது.
இந்த நிலையில் நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை கடந்த 5 நாட்களில் 25 காசுகள் அதிகரித்து 595 காசுகளாக இருந்தது இன்று 600 காசுகளாக உயர்த்தப்பட்டது.
55 ஆண்டுகால நாமக்கல் கோழிப் பண்ணை வரலாற்றிலேயே முதல் முறையாக முட்டை கொள்முதல் விலை அதீத உச்சத்தை எட்டியுள்ளது.
இதனையடுத்து சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை விலை ரூ.7 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
