தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று (பிப்ரவரி 19) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் சென்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்தார்.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் என காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வரவேற்றுள்ளன.
இந்நிலையில், திமுக-தேமுதிக கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “எந்த கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்பது அந்தந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பம்” எனத் தெரிவித்தார்.
இதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “சஸ்பென்ஸ் முடிந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
