திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Feb 2026, 4:16 PM

Two drastic changes in DMK

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 20-02-2026 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

ADVERTISEMENT

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்திட, மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிப் பார்வையாளர்கள் தொகுதி அளவில் பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel