ADVERTISEMENT

“என் குடும்பத்துல பிரச்சினைய உண்டாக்கிடாதீங்க” : டிடியிடம் எடப்பாடி பழனிசாமி கலகல!

Published On:

| By Kavi

தனது குடும்ப வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் மாவட்டமாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் அவர் கலாட்டா வாய்ஸ் யூடியூப் சேனலில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அரசியல் வாழ்க்கை குறித்தும் பகிர்ந்துள்ளார்.

கேள்வி பதில்…

ADVERTISEMENT

உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். ஒரே பெண்ணைதான் பார்த்தேன்…அவரையே திருமணம் செய்துகொண்டேன்.

ADVERTISEMENT

எப்போது பார்த்தாலும் வேலை மட்டுமே செய்துகொண்டிருந்திருக்கிறீர்கள்?

என் மனைவி என்னுடன் ஒத்துப்போவார். இதுவரை குடும்பத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் ஏதாவது பேசி பிரச்சினையை உண்டாக்கிடாதீங்க…

நீங்கள் பைக்கில் ஸ்டைலா போவீங்களாமே? உங்களுக்கு பைக் பிடிக்குமா.. காரா?

ஸ்டைல் எல்லாம் கிடையாது. ராயல் என்ஃபீல்டில் போவேன்.

நீங்கள் வைத்த செடி வாடிபோனால் மிகவும் வருத்தப்படுவீர்களாமே?

செடி வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று விவசாயிக்குதான் தெரியும். அது வாடிப்போனால் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. என் தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் விவசாயம் செய்தார்கள். நானும் விவசாயி. இன்றைக்கும் என்னுடைய பணி, என்னுடைய தொழில் விவசாயம் தான்.

உங்களுக்கு பிடித்த படம்?

எம்.ஜி.ஆர் நடித்த அரச கட்டளை. இப்போது என்ன நடக்கிறதோ… அதை அந்த காலத்திலேயே பேசியிருப்பார்.

இப்போது படம் பார்ப்பதில்லையா?

நான் தியேட்டருக்கு போயே 20 ஆண்டுகள் ஆகிறது.

1974ல் நீங்கள் பொறுப்பேற்றபோது ஒருநாள் முதல்வர் ஆவோம் என்று நினைத்தீர்களா?

நான் எதுவுமே நினைக்கவில்லை. கிளை செயலாளராக பணியை தொடங்கினேன். இறைவன் படிபடியாக உயர்த்தியிருக்கிறார்.

அரசியல்வாதிகளை பார்த்தாலே பயப்பட வேண்டுமென நினைக்க வைத்துவிட்டார்கள்… ஒருவேளை சினிமாக்களை பார்த்து அப்படி தோன்றுகிறதா?

என்கிட்ட பேசிக்கொண்டிருக்கிறீர்கள்… பயந்துகொண்டா பேசுகிறீர்கள்.

எல்லோருமே சட்டையில் ஒரு போட்டோ வைத்திருக்கிறீர்களே? நீங்கள் எப்போது முதல்முறையாக வைத்தீர்கள்?

இந்த இயக்கத்திற்கு தலைவருக்கு பிறகு அம்மாதான் . எங்களுடைய தலைவருக்கு கொடுக்கும் மரியாதையை போல அவர் வழியில் செயல்பட வேண்டும் என்று இந்த புகைப்படமே நமக்கொரு வலிமையை கொடுக்கும்.

ஜெயலலிதா உங்களை பற்றி பேசிய வீடியோவை நீங்கள் போட்டு பார்ப்பீர்களா?

மனதிலேயே இருக்கிறது… ஏன் போட்டு பார்க்க வேண்டும்.

பழனிசாமி என்பவர் எடப்பாடியார் என்று மாறியது எப்படி?

பழனிசாமி என்றுதான் லெட்டர் பேடில் இருந்தது… அம்மாதான் எடப்பாடியார் என்று கூறினார்.

இவ்வாறு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share