செந்தில் பாலாஜி தம்பி அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை எதிர்ப்பு!

Published On:

| By Minnambalam Desk

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிப்பதற்கு அமலாக்க த்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பண மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதே அவரது தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அசோக் குமார் ஆஜராகாமல் தலைமறைவானார். ED opposes Senthil Balajis brother

ADVERTISEMENT

செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளியே வந்தார். கடந்த ஏப்ரல் 9-ம் தேதி அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக் குமார் சென்னை முதன்மை அவர் அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால் விசாரணை பாதிக்கப்படும் என்று அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசோக் குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.சுரேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன் கடந்த ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, பயணத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக்குமார் தரப்பிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ED opposes Senthil Balajis brother

மேலும் மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். ED opposes Senthil Balajis brother

இந்நிலையில் இன்று (ஜூலை 22) மீண்டும் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் அசோக் குமாருக்கு 9 முறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் ஒருமுறை கூட அவர் ஒத்துழைக்கவில்லை என வாதங்கள் முன் வைக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவில் சென்று பெரும் சிகிச்சையை இந்தியாவிலேயே பெறலாம்.

ஆகவே அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதிக்க கூடாது என்று எதிர்ப்பு அமலாக்கத் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அமெரிக்காவில் முடக்கப்பட்ட சொத்துக்கள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை இல்லை என்று தெரிவித்தது.

இதையடுத்து சிகிச்சை பெறக்கூடிய மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்யுமாறு அசோக் குமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ED opposes Senthil Balajis brother

மேலும் இந்த தகவல் குறித்த உண்மை தன்மையை ஆய்வு செய்ய அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தி வழக்கை வரும் ஜூலை 29ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share