ADVERTISEMENT

கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள்.. கவனிக்க மறந்துடாதீங்க..!

Published On:

| By Santhosh Raj Saravanan

Early symptoms of fatty liver disease

ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நமது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் உள்ளது. கல்லீரல் என்பது நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானப்படுத்தும் பணியை பிரதானமாக செய்கிறது. மற்ற உறுப்புகளை போல இல்லாமல் கல்லீரல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் உறுப்பு. ஆனாலும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக கல்லீரலில் கொழுப்பு அடிக்கடி சேர்ந்து ஃபேட்டி லிவர் ஆபத்தை உண்டாக்குகிறது. இது கொழுப்பு கல்லீரல் என்று அழைக்கப்படுகிறது. சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஆபத்துக்கு வழிவகுக்கும்.

ADVERTISEMENT

கொழுப்பு கல்லீரலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் வயிற்றில் தெரியத் தொடங்குகின்றன. வாயு, வீக்கம் அல்லது பசியின்மை போன்ற பொதுவான வயிற்றுப் பிரச்சினைகளாக அறிகுறிகள் இருப்பதால் மக்கள் பெரும்பாலும் அவற்றைப் புறக்கணித்துவிடுகிறார்கள்.

வலது பக்கத்தில் விலா எலும்புகளுக்குக் கீழே வலி (Pain Areas): உங்கள் வலது பக்கத்தில் மந்தமான வலி, அழுத்தம் அல்லது கனமாக உணர்ந்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. கல்லீரலில் கொழுப்பு சேர்வது அதிகரிப்பதால் இந்த வலி ஏற்படுகிறது. அதிக அளவு உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது படுத்த பிறகோ இந்த வலி மோசமடையக்கூடும்.

ADVERTISEMENT

திடீர் எடை இழப்பு (Sudden weight loss): உணவுக் கட்டுப்பாடு அல்லது உடற்பயிற்சி இல்லாமல் திடீரெனவும் விரைவாகவும் எடை இழப்பு ஏற்பட்டால், எச்சரிக்கையாக இருங்க வேண்டும். கல்லீரல் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாமல் உடல் பலவீனமடையத் தொடங்கும் போது எடை இழக்கத் தொடங்குகிறோம்.

அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி (nausea and vomiting): எண்ணெய் அல்லது காரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு வாந்தி அல்லது குமட்டல் ஏற்படுவது, கல்லீரல் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்தப் பிரச்சனை சில நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ADVERTISEMENT

வயிறு அல்லது கால்களில் வீக்கம் (Swelling in the abdomen or legs): வயிற்றில் திடீரென வீக்கம் அல்லது கால்கள, கணுக்கால்களில் வீக்கம் ஏற்பட்டால், அதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லீரல் இரத்த ஓட்டம் மற்றும் திரவ சமநிலையை சரியாக நிர்வகிக்க முடியாதபோது இது ஏற்படுகிறது.

மலம் நிறத்தில் மாற்றங்கள் (Changes in stool color): கல்லீரலின் நிலை குறித்து மலத்தின் நிறமே வெளிப்படுத்துவிடும். அது மஞ்சள், சாம்பல், கருப்பு அல்லது நீர் போன்ற நிறமாக மாறினால், அது பித்த சமநிலையின்மையாக இருக்கலாம். இது நேரடியாக கொழுப்பு நிறைந்த கல்லீரலைக் குறிக்கிறது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையின் பேரில் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்துகொள்வது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share