டிஎஸ்பி சுந்தரேஷனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. DSP Sundaresan suspended
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் சுந்தரேஷன். இவருக்கு கொடுத்த போலீஸ் வாகனத்தை தமிழக அரசு எந்த காரணமும் இல்லாமல் பறித்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் அவர் தனது அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வீடியோவும் இணையத்தில் வெளியானது. இந்தநிலையில் நேற்று (ஜூலை 17) மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிஎஸ்பி சுந்தரேஷன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் முதல் மயிலாடுதுறை எஸ்.பி.இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் வரை பலர் மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
தன்னை உயர் அதிகாரிகள் டார்கெட் செய்வதாகவும், விதிமுறைகளை மீறி தனக்கு வழங்கப்பட்ட காரை திரும்ப வாங்கிக் கொண்டதாகவும் கூறியிருந்தார்.
இந்தநிலையில், அவரை இன்று (ஜூலை 18) சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. DSP Sundaresan suspended