போதைப் பொருள் வழக்கில் தற்போது சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது பின்னணி, சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Drug case attracts dark life – who is Srikanth?
ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த். ஹைதராபாத்தில் பிறந்த இவர், அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணிபுரிந்ததால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் டெங்கு பாதிப்பால் அவர் உயிரிழந்தார்.
இளம் வயதில் தனது அண்ணனை இழந்து தவித்த ஸ்ரீகாந்தின் கவனம், மாடலிங் சினிமா பக்கம் திரும்பியது. அதன்படி தனது ஆரம்பகாலத்தில் அப்போது உதவி இயக்குநர்களாக இருந்த வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் ஆகியோரிடம் நடிப்பு பயின்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து கதிரின் ‘காதல் வைரஸ்’ மற்றும் ஜீவாவின் ’12பி’ படங்களில் நடிக்க முதலில் தேர்வானார். ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்புகள் போனது. அதேபோன்று பாரதிராஜா மற்றும் பாலசந்தர் இயக்கிய படங்களிலும் ஸ்ரீகாந்திற்கு கிடைத்த வாய்ப்புகள் மாறிப் போயின.

முதல் படமே சூப்பர் வெற்றி! Drug case attracts dark life – who is Srikanth?
எனினும் 2002ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘ரோஜா கூட்டம்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. அந்த படம் ஹிட் ஆன நிலையில் அவர் மீது ரசிகர்கள் கவனம் திரும்பியது. அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ’சிறந்த அறிமுக நடிகர்’ என்ற விருதை பெற்ற அவர், ரசிகர்களால் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் என்று அழைக்கப்பட்டார்.
அதன் பிறகு சினேகா உடன் இனைந்து அவர் நடித்த ’ஏப்ரல் மாதத்தில்’, ’பார்த்திபன் கனவு’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுக்க, கோலிவுட் தாண்டி தெலுங்கு திரையுலக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. Drug case attracts dark life – who is Srikanth?

தெலுங்கில் ஏற்கெனவே ஸ்ரீகாந்த் என்ற பெயரில் பிரபலமான நடிகர் இருந்ததால், தனது பெயரை ஸ்ரீராம் என்று பயன்படுத்தி தெலுங்கு சினிமாவில் ஓகரிகி ஓகாரு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படமும் அவரது நடிப்புக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அதன்பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு (2005) மற்றும் பம்பரா கண்ணாலே (2005) ஆகிய படங்களும் அவர் மீதான பாசிட்டிவ் இமேஜை உயர்த்தின.
தொடர்ந்து பிரபல தமிழ் இயக்குனரான செல்வராகவன் இயக்கிய ’ஆடவரி மாதலகு அர்த்தலே வெருலே’ என்ற தெலுங்கு படத்தில் நடிகர் வெங்கடேஷை அடுத்து ஸ்ரீகாந்த் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். இந்த படம் ஆந்திராவில் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியது.

திருமண சர்ச்சை! Drug case attracts dark life – who is Srikanth?
இதற்கிடையே கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார் ஸ்ரீகாந்த். ரகசிய திருமணம் செய்து, 3 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு பிறகு தன்னை மனைவியாக ஏற்க மறுப்பதாக எம்பிஏ பட்டதாரியான வந்தனா என்பவர் ஸ்ரீகாந்த் மீது போலீஸில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக ஒருவருடகாலமாக சட்ட போராட்டங்களை எதிர்கொண்ட அவர், 2008ஆம் ஆண்டு வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர்.
திருமண சர்ச்சை மற்றும் தவறான கதைத் தேர்வு உள்ளிட்டக் காரணங்களால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவின. Drug case attracts dark life – who is Srikanth?

நண்பன் -ஆல் கவனம் பெற்ற ஸ்ரீகாந்த் Drug case attracts dark life – who is Srikanth?
இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து ’நண்பன்’ படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஜீவாவுடன் இணைந்து விஜய்யின் நண்பராக நடித்து கவனம் ஈர்த்தார்.
இதில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்க வேண்டிய அவரது திரைப்பயணம், தெலுங்கு, மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியதால் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் காணாமல் போனார்.
அந்த காலக்கட்டத்தில் நிப்பு, லை, ராகல 24 கண்டலோ, ஜெய் சேனா, வை, அசலேம் ஜருகண்டி, 10th class டயரீஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும், ஹீரோ, படி உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சரிவை நோக்கி அவரது திரைப்பயணம் சென்று கொண்டிருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் அவரது நடிப்பில் வருடத்திற்கு தலா 6 படங்கள் வெளியாகின. ஆனால் அனைத்துமே தோல்வி படங்களாக மாறி அவருக்கு பெரிய மனவலியை ஏற்படுத்தின.
இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஆகிய திரைப்படங்கள் திரையங்கில் வெளியானது கூட பலருக்கு தெரியாது என்பதே உண்மை.
இந்த நிலையில் தற்போது போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீகாந்த். Drug case attracts dark life – who is Srikanth?