’உங்கள் சார்பாக இந்த அமைதிக்கான நோபல் பரிசை ஏற்றுக்கொள்கிறேன்’ என வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரொனா மச்சோடா தன்னிடம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான், இஸ்ரேல் – காசா உள்ளிட்ட 8 போர்களை நிறுத்தியதாக கூறி அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தர வேண்டும் என கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசானது வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் போராளியும், எதிர்க்கட்சி தலைவருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக நேற்று நோபல் கமிட்டி அறிவித்தது.
வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான மச்சோடாவின் போராட்டத்திற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
எனினும் நோபல் பரிசு வென்ற மச்சோடா கூறுகையில், “எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும், எனக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்துவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன்” எனக் கூறினார்.
இதனையடுத்து தனக்கு நோபல் பரிசு தரப்படாதது குறித்து டிரம்ப் பேசுகையில், “அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற இன்று என்னை அழைத்து பேசினார், ‘உங்கள் சார்பாக இந்த பரிசை ஏற்றுக்கொள்கிறேன், ஏனென்றால் நீங்கள் உண்மையிலேயே அதற்கு தகுதியானவர்’ என்றார். ஆனால், பரிசை ‘எனக்குக் கொடுங்கள்’ என நான் அவரிடம் கேட்கவில்லை, இருப்பினும் நான் பல மில்லியன் மக்களின் உயிர்களைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.