பொது வெளியில் கூட்டணி பற்றி திமுகவினர் பேச கூடாது.. ஆர்.எஸ். பாரதி அட்வைஸ்

Published On:

| By Mathi

DMK RS Bharathi

பொது வெளியில், “கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை திமுக நிர்வாகிகள் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஆர்.எஸ். பாரதி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும்.

ADVERTISEMENT

தேவையற்ற சர்ச்சைகளினால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

கூட்டணி தொடர்பான முடிவுகளை முதல்வர் ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பின்னணி என்ன?

திமுகவிடம் “ஆட்சியில் பங்கு, அதிக இடங்கள்” என வலியுறுத்தி வருகிறது காங்கிரஸ். ஆனால் முதல்வர் ஸ்டாலின் இதனை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

ADVERTISEMENT

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடர்ந்து அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். இதன் அடுத்த கட்டமாக திமுக MLA கோ. தளபதி, காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து தளபதி MLA மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் ஆர்.எஸ். பாரதி இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share