ADVERTISEMENT

”உங்க கனவ சொல்லுங்க”…ஒவ்வொரு குடும்பத்தின் தேவையை கேட்டு ‘கனவு அட்டை’ தரும் திமுக அரசு!

Published On:

| By Mathi

Dream Card Tamil Nadu

தமிழ்நாட்ட்ல் ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளை கண்டறியும் வகையில் “உங்கள் கனவுகளை சொல்லுங்க” என்கிற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், “அரசு பணியாளர்கள் டீம் ஒன்னு வீடு வீடா போக இருக்கு.. அப்படி போகிற இந்த டீம்

ADVERTISEMENT
  • மகளிர் உரிமைத் தொகை வந்திருக்கா?
  • வீட்டுல படிக்குற பிள்ளைகளுக்கு உதவித் தொகை வந்திருக்கா?
  • உங்க வீட்டுக்கு இன்னும் என்ன தேவை?
  • வீடு.. பட்டா, மின்சார வசதி தேவையா?

என கேட்டு ஒரு பார்மில் அதை எழுதி தாங்கன்னு சொல்ல போறாங்க..

அப்படி எழுதி கொடுக்கிறவங்களுக்கு QR குறியீடு இருக்கிற ஸ்மார்ட் கார்டு மாதிரி ஒன்னு கொடுப்பாங்க.. 2026 தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஆட்சி அமையும் போது உங்க அப்ளிகேஷன் என்ன ஸ்டேஜில் இருக்குன்னு அந்த கார்டு மூலமாக தெரிஞ்சுக்கலாம்னு சொல்ல போறாங்க.. SIR முடிஞ்ச உடனேயே இந்த வேலையை ஜரூராக தொடங்க போறாங்க”ன்னு பதிவு செய்திருந்தோம்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,

  • ‘உங்க கனவு திட்டம்’ என்பது ஒரு குடும்பம் சார்ந்த திட்டம். ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளை தெரிந்து கொள்ளக் கூடிய திட்டம் இது.
  • ஒவ்வொரு குடும்பத்தின் கனவு என்ன என்பதை கேட்க இருக்கிறோம்
  • 50,000 தன்னார்வலர்கள் இத்திட்டத்துக்கான பணியில் ஈடுபடுவர்
  • இத்திட்டத்துக்கான ஃபார்ம் ஒன்றை தன்னார்வலர்களிடம் கொடுத்துள்ளோம்
  • வீடுதேடி வரும் தன்னார்வலர்கள் இந்த பார்மை குடும்பத்தினரிடம் கொடுப்பர்
  • அந்த ஃபார்மில் குடும்பத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வோம்.
  • அரசின் 10 வகையான திட்டங்க:ளில் எந்த திட்டத்தால் பயனடைகிறீர்கள் என கேட்கப்படும்.
  • முக்கியமான 3 கனவுகள் என்ன என்பதையும் கேட்போம். இவை அனைத்தையும் ஃபார்மில் நிரப்ப சொல்வோம்.
  • ஃபார்ம் கொடுத்துவிட்டு வந்த பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் அந்த வீடுகளுக்கு செல்வோம். அந்த ஃபார்மை வாங்கிக் கொண்டு அதில் உள்ள விவரங்களை செயலி ஒன்றில் பதிவு செய்வோம். இப்படி பதிவு செய்யும் போது அந்த குடும்பத்துக்கு என ஒரு யூனிக் ஐடி எண் வரும். அந்த எண்ணை பதிவு செய்து ”கனவு அட்டையை” அந்த குடும்பத்திடம் கொடுப்போம்.
  • அடுத்த கட்டமாக அதே குடும்பத்தில் இருக்கக் கூடிய 15 வயது முதல் 29 வயது வரையிலான இளைஞர்களின் கனவு என்ன என்பதை கேட்போம். அதை வெப்சைட் ஒன்றில் பதிவு செய்வோம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share