கரூரில் நடந்த விஜய்யின் தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இன்று அதிகாலை 1 மணியளவில் கரூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (செப்டம்பர் 28) திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டுள்ள இரும்பு பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இன்றும், நாளையும் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாளை திட்டமிடப்பட்டிருந்த முதல்வரின் ராமநாதபுர பயணமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.