காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ள கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் சென்னை வருகை தந்துள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளைப் பெறுவதில் ராகுல் பிடிவாதமாக உள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளை மட்டும் ஒதுக்க முடியும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இன்று மாலை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் பேச்சுவார்த்தை குழு தலைவருமான கிரிஷ் சோடங்கர், பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ள நிவேதித் ஆல்வா ஆகியோர் சென்னை வருகை தந்தனர்.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி எதுவும் இல்லை; காங்கிரச் மேலிடத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்” என்றார் செல்வப்பெருந்தகை.
