வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR-க்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்- ‘ஸ்டாலின் சபதம்’!

Published On:

| By Mathi

SIR DMK Alliance Protest

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தமான SIR-க்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தின.

SIR-க்கு எதிராக சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்.பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், தமிழ்நாட் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சிபிஐ மூத்த தலைவர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதேபோல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், ” SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை!

ADVERTISEMENT

ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் – களப் போராட்டம் -மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட WarRoom Helpline –

களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் – கண்டன முழக்கங்களை எழுப்பியும் SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!

தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் க்குரிமையைப் பாதுகாப்போம்! என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share