திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தலைசுற்றல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் இன்று முதல் வழக்கமான அரசு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் இன்று ஜூலை 31-ந் தேதி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.