டிட்வா புயல் காரணமாக காவிரி டெல்டா மற்றும் வட தமிழகத்தில் கனமழை கொட்டி வருகிறது. இன்று நவம்பர் 30-ந் தேதி 5 மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் பகுதியில் உருவான டிட்வா புயல், கடலில் இருந்து நிலப்பரப்புக்குள் ஊடுருவி பின்னர் கடலுக்குள் இறங்கி தமிழ்நாட்டை நோக்கி நகருகிறது. இந்த டிட்வா புயல் காவிரி டெல்டா மற்றும் வட தமிழ்நாட்டை நெருங்கி வருகிறது. அதே நேரத்தில் மேக கூட்டங்கள் இல்லாமல் சுழலாக இந்த டிட்வா புயல் கரையை நோக்கி நகருவதாகவும் கூறப்படுகிறது. இன்று இரவு சென்னைக்கு அருகே கரையை டிட்வா புயல் நெருங்கும்.
இதனிடையே, டிட்வா புயல் காரணமாக வட தமிழ்நாடு மற்றும் காவிரி டெல்டாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இன்று
நாகை
கடலூர்
மயிலாடுதுறை
விழுப்புரம்
செங்கல்பட்டு
ஆகிய 5 மாவட்டங்களில் 21 செ.மீ.க்கும் அதிகமான அதீத கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயலானது தற்போது
- சென்னைக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவிலும்
- காரைக்காலுக்கு தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும் நகர்ந்து வருகிறது.
