தமிழகத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் வங்க கடலின் டிட்வா புயல், கரையைக் கடக்க வாய்ப்பு இல்லை; கரையை நெருங்கும் போது கடலிலேயே வலுவிழக்கக் கூடும் என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள்:
- இன்று நள்ளிரவில் வட தமிழ்நாடு, புதுவை கடலோரப் பகுதிகளில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும், நாளை அதிகாலை 50 கி.மீ. தொலைவிலும், நாளை மாலை 25 கி.மீ தொலைவிலும் டிட்வா புயல் நகர்ந்து வரும்.
- நாளை நவம்பர் 30-ந் தேதி
திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. - சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வங்க கடல் பகுதிகளில் 70 முதல் 80 கிமீ வேகத்திலும், இடையிடையே 90 கிமீ வேகத்திலும் காற்று வீசும்.
- டிசம்பர் 1-ந் தேதி முதல் மழை பாதிப்பு படிப்படியாக குறையக்கூடும்.
- கடந்த 24 மணி நேரத்தில் கோடியகரையில் 25 செமீ, வேதாரண்யத்தில் 19 செமீ, வேளாங்கண்ணியில் 13 செமீ, திருப்பூண்டி, நாகப்பட்டினத்தில் 12 செமீ மழை பதிவானது.
- டிட்வா புயல் கரையை கடக்க வாய்ப்பு இல்லை.
- டிட்வா புயலாகவே கரையை ஒட்டியே செல்லும்.
- வட தமிழக கடற்கரையை நெருங்கும் போது கடலிலேயே டிட்வா புயல் வலுவிழக்கும் நிலைதான் உள்ளது.
- சென்னை மாநகரத்தில் விட்டு விட்டு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
