Ditwah Cyclone Updates: பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. ராமேஸ்வரம் ரயில் சேவையில் முக்கிய மாற்றங்கள்- முழு விவரம்!

Published On:

| By Mathi

Ditwah Cyclone Rameswaram

இலங்கையை புரட்டிப் போட்டு தமிழ்நாட்டை மிரட்ட வரும் டிட்வா (டித்வா) புயலால் ராமேஸ்வரம் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்று நவம்பர் 29-ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் விவரம்:

ADVERTISEMENT
  • 22662 ராமேஸ்வரம் – தாம்பரம் சேது சூப்பர்பாஸ்ட் ரயில் ராமநாதபுரத்தில் இருந்து இன்று இரவு 21.45-க்கு புறப்படும்.
  • 16104 ராமேஸ்வரம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் இன்று மாலை 16.25 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
  • 16344 ராமேஸ்வரம் – திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று பகல் 14.15 மணிக்கு புறப்படும்.
  • 16850 ராமேஸ்வரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில், மானாமதுரையில் இருந்து இன்று மாலை 16.55 மணிக்கு புறப்படும்.
  • 16752 ராமேஸ்வரம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில், மண்டபத்தில் இருந்து இன்று மாலை 18.20 மணிக்கு புறப்படும்.
  • 22621 ராமேஸ்வரம் – கன்னியாகுமரி சூப்பர்பாஸ்ட் ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 21.42 புறப்படும்.
  • 56712 ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில், உச்சிபுளி ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 06.33 மணிக்கு புறப்படும்.
  • 56714 ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில், உச்சிபுளியில் இருந்து இன்று பகல் 12.25 மணிக்கு புறப்படும்.
  • 56716 ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில், உச்சிபுளியில் இருந்து இன்று இரவு 19.03-க்கு புறப்படும்.

ராமேஸ்வரத்துக்கு செல்ல வேண்டிய ரயில்கல் நிறுத்தப்படும் இடங்கள்

  • 22614 – அயோத்தியா காந்த் – ராமேஸ்வரம் ஸ்ரத்தா சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மண்டபத்தில் நிறுத்தப்படும்
  • 22661 – தாம்பரம் – ராமேஸ்வரம் சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ராமநாதபுரத்தில் நிறுத்தப்படும்
  • 16103 – தாம்பரம் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மண்டபத்தில் நிறுத்தப்படும்
  • 16751 – தாம்பரம் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ராமநாதபுரத்தில் நிறுத்தப்படும்
  • 16849 – திருச்சி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மானாமதுரையில் நிறுத்தப்படும்
  • 16343 – திருவனந்தபுரம் – ராமேஸ்வரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் மண்டபத்தில் நிறுத்தப்படும்
  • 16779 – திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்மண்டபத்தில் நிறுத்தப்படும்
  • 20849 – புவனேஸ்வர் – ராமேஸ்வரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மண்டபத்தில் நிறுத்தப்படும்
  • 56713 – மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் உச்சிபுளியில் நிறுத்தப்படும்
  • 56715 – மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் உச்சிபுளியில் நிறுத்தப்படும்
  • 56711 – மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் உச்சிபுளியில் நிறுத்தப்படும்

16733 ராமேஸ்வரம்- ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share