இந்த 2026 நிதியாண்டில் ஜனவரி 11ஆம் தேதி வரை இந்தியாவின் நேரடி வரி வசூல் 8.82 சதவீதம் அதிகரித்து, ரூ.18.38 லட்சத்திற்கும் அதிகமாக வசூலாகியுள்ளது. இதில் கார்ப்பரேட் வரியாக ரூ.8.63 லட்சமும், தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்களிடம் இருந்து ரூ.9.30 லட்சமும் வசூலாகியுள்ளது. பங்கு பரிவர்த்தனை வரியாக (STT) ரூ.44,867 கோடி வசூலாகியுள்ளது. வரி திருப்பி அனுப்பும் தொகை 17 சதவீதம் குறைந்து ரூ.3.12 லட்சமாக உள்ளது.
வருமான வரித் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிதியாண்டில் ஜனவரி 11 வரை, நேரடி வரி வசூல் 8.82 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ரூ.18.38 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த மொத்த வசூலில், நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கார்ப்பரேட் வரி ரூ.8.63 லட்சமாகும். தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் போன்ற கார்ப்பரேட் அல்லாதவர்களிடம் இருந்து ரூ.9.30 லட்சம் வசூலாகியுள்ளது.
மேலும், ஏப்ரல் 1 முதல் ஜனவரி 11 வரை பங்கு பரிவர்த்தனை வரியாக (STT) ரூ.44,867 கோடி வசூலாகியுள்ளது. இந்த காலகட்டத்தில், வரி திருப்பி அனுப்பும் தொகை 17 சதவீதம் குறைந்து ரூ.3.12 லட்சமாக உள்ளது. மொத்த நேரடி வரி வசூல் 4.14 சதவீதம் அதிகரித்து, ஜனவரி 11 வரை சுமார் ரூ.21.50 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்த நிதியாண்டில் (2025-26) நேரடி வரி வசூல் ரூ.25.20 லட்சமாக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.7 சதவீதம் அதிகமாகும். 2026 நிதியாண்டில் பங்கு பரிவர்த்தனை வரியிலிருந்து ரூ.78,000 கோடி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
