விஜய்யின் தவெக பிரச்சாரக் கூட்டம் இன்று (செப்டம்பர் 27) கரூர், நாமக்கல் பகுதியில் நடைபெற்றது. கரூர் பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு பலரும் உயிரிழந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 58 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திருச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக கரூர் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.