வைஃபை ஆன் செய்ததும், “வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதே”என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னப்பா சங்கதி? விஜய் கரூருக்கு போகிற மேட்டரா?
ஆமாம்யா.. கரூர் சம்பவம் நடந்து 18 நாட்களாகிவிட்டது.. இப்ப கேஸும் சிபிஐக்கு போயிடுச்சு.. இதனால விஜய் கரூருக்கு போறதுக்கு தடபுடலா ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்தும் அருண்ராஜூம் செஞ்சுகிட்டு இருந்தாங்க..
ஆமா.. அதுல என்ன சிக்கலாம்?
உச்சநீதிமன்ற உத்தரவால கரூர் சம்பவத்தை சிபிஐ இப்ப விசாரிக்குது.. இதனால கைது நடவடிக்கையை ஸ்டேட் போலீஸ் செய்ய முடியாதுங்கிறதால தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் வெளியே வந்துட்டாங்க..
அப்படி வெளியே வந்த உடனேயே புஸ்ஸி ஆனந்த், கரூரில் இருக்கிற நிர்வாகிங்களை எல்லாம் அழைச்சு பேசி, விஜய் கரூருக்கு போவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்தாரு..
அருண்ராஜூம், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் ஒரே இடத்தில் சந்திக்கிற மாதிரி எந்த திருமண மண்டபம் சரியாக வரும்? எது பெரிய திருமண மண்டபம்? அல்லது ஏதாவது காலேஜ் ஆடிட்டோரியம் சரியாக வருமா? என கரூர் தவெக நிர்வாகிகளிடம் சீரியசாக பேசிகிட்டு இருந்தார்..
ஓஹோ.. இதுல என்ன இப்ப பிரச்சனையாம்?
புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ்னு எல்லோரும் விஜய் கரூருக்கு போகிற ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினாங்க.. கரூரில் இருக்கிற தவெக நிர்வாகிகளும், விஜய் வந்துட்டு போனாதான் வெளியே தலைகாட்ட முடியும் என்பதால நிம்மதியாக இருந்தாங்க..
இந்த சூழ்நிலையில்தான், விஜய், தவெக ஆபீசில் முக்கியமான டிஸ்கஷனை நேற்று இரவு நீண்டநேரம் நடத்தினாரு..
அதுல என்ன முடிவு எடுத்தாங்களாம்யா?
இதுபற்றி விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் பேசுனோம், அப்போது, “விஜய்கூட நேற்று புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், ஜான் ஆரோக்கியசாமின்னு எல்லோரும் கரூர் போறதை பற்றி டிஸ்கஷன் செஞ்சுகிட்டு இருந்தாங்க..
புஸ்ஸி ஆனந்தும் அருண்ராஜூம் ஏற்பாடுகள் என்ன லெவலில் இருக்குன்னு ரொம்பவே விளக்கமாக சொல்லிகிட்டு இருந்தாங்க.. விஜய்யும் கூட கவனமாக கேட்டுகிட்டு இருந்தாரு..
அப்ப யாருமே எதிர்பார்க்காத விஷயத்தை ஜான் ஆரோக்கியசாமி சொல்ல ஒட்டுமொத்த ஆலோசனைக் கூட்டமும் அப்படியே ஷாக் ஆகிடுச்சு…
அதாவது, “கரூருக்கு விஜய் போகும் போது ஒரு கும்பல் அவரை அட்டாக் செய்ய ரெடியாக இருக்குதுன்னு எனக்கு சீக்ரெட் ரிப்போர்ட் வந்துருக்கு.. அதனால விஜய் கரூருக்கு போக வேண்டாம்.. அந்த ப்ளானை டிராப் பண்ணிடலாம்” என ஜான் ஆரோக்கியசாமி சொன்னாரு..
ஜான் ஆரோக்கியசாமி இப்படி சொன்னதும் புஸ்ஸி ஆனந்தும் அருண்ராஜூம் மற்றவங்களும் “என்னங்க சொல்றீங்க”ன்னு அதிர்ச்சியாக கேட்டாங்க..
ஆனால் விஜய், “நம்மை அட்டாக் செய்ய பிளான் பண்றாங்கன்னு ரிப்போர்ட் வந்திருக்குன்னா நாம ஏன் கரூருக்கு போகனும்? கரூருக்கு போகாமல் இருந்துடுவோம்.. கரூருக்கு போகாம பாதிக்கப்பட்டவங்களை சந்திக்க ஏற்பாடு செய்யலாமே” என அசால்ட்டாகவே சொன்னார்..
கடைசியாக விஜய் கரூருக்கு போவது இல்லை எனவும் கரூர் சம்பவத்துல பாதிக்கப்பட்ட அத்தனை பேரையும் பனையூர் கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்து ஆறுதல் சொல்லி நிதி உதவி தருவதுன்னும் முடிவு எடுக்கப்பட்டிருக்கு” என்றனர்.
விஜய் கட்சி ஆபீசில் நடத்திய சந்திப்பு, கரூருக்கு விஜய் போகலைன்னு எடுக்கப்பட்ட முடிவைத்தான் இப்ப புஸ்ஸி ஆனந்தும் அருண்ராஜூம் கரூர் தவெக நிர்வாகிகளிடம் மென்று விழுங்கியபடி தயக்கத்துடன் சொல்லி வருகின்றனர்.
கரூர் தவெக நிர்வாகிகளில் ஒருதரப்பு “அப்படி எல்லாம் தளபதி (விஜய்) முடிவெடுக்க வேண்டாம்னு சொல்லுங்க அண்ணே.. நாங்க பாதுகாப்பு தருவோம்.. அவரை கரூருக்கு கண்டிப்பாக வரச் சொல்லுங்க.. அப்பதான் நல்லா இருக்கும்” என கெஞ்சுகிறார்களாம்..
அதேநேரத்தில் கரூர் தவெக நிர்வாகிகளில் சிலர், “இது என்னங்க கூத்தா இருக்கு.. ஏற்கனவே இப்படி பனையூர் கட்சி ஆபீசுக்கு கூப்பிட்டு நிதி உதவி கொடுக்கிறதை எல்லோரும் கிண்டல் செய்யறாங்க.. நிதி உதவி கொடுக்க கூட நேரில் போகமாட்டாரா?ன்னு கேட்கிறாங்க.. கரூரில் ஒருத்தர் ரெண்டு பேரா இறந்தாங்க? 41 பேர் இறந்திருக்காங்க.. இந்தியாவே இதை பார்த்துகிட்டு இருக்கு.. இதிலும் இப்படி பனையூர் ஆபீசுக்கு வரவழைச்சு நிதி உதவி கொடுத்தா நல்லாவா இருக்கும்?
ஜான் ஆரோக்கியசாமிக்கு யார்தான் அந்த ரிப்போர்ட் அனுப்பினாங்களாம்? விஜய்யை அட்டாக் செய்யுற பிளானில் எந்த குரூப் இருக்குதாம்? அப்படி அட்டாக் செய்ய நினைச்சா ஏன் கரூரில்தான் செய்யனுமா? பனையூரில் கட்சி ஆபீசில் செய்ய முடியாதா? இதெல்லாம் எப்படி ஏத்துக்க முடியும்?” என கிண்டலும் விரக்தியுமாக வெடித்து கொண்டிருக்கின்றனர் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.