டிஜிட்டல் திண்ணை: எஸ்டிபிஐ முபாரக்குக்கு ஸ்டாலின் தந்த ‘பிராமிஸ்’!

Published On:

| By Mathi

SDPI DMK Stal;in New

வைஃபை ஆன் செய்ததும், ”சிறு துரும்பும் பல் குத்த உதவும்.. சிறு துளி பெருவெள்ளம்”னு வாசித்தபடியே டைப் செய்ய தொடங்கியது..

என்னய்யா.. சின்ன கட்சிகளைப் பத்திதானே சொல்லப் போறீரு?

ADVERTISEMENT

ஆமாய்யா.. திமுக கூட்டணியில 11 சின்ன கட்சிகளுக்கு தலா 1 சீட் கொடுத்து உதயசூரியன் சின்னத்துல நிற்க சொல்லி இருக்காங்க..

இதுல சில கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குறதுல ரொம்பவே இழுபறி இருந்துகிட்டு இருக்கு..

ADVERTISEMENT

இதை பத்தி அறிவாலயத்துல விசாரிச்சப்ப, “சில கட்சிகள் ஒதுக்குகிற தொகுதிகளை ஏத்துகிட்டாங்க.. தமிழர் தேசம் கட்சிக்கு நத்தம் தொகுதி கொடுத்தோம்.. அங்கே முத்தரையர்கள் மெஜாரிட்டிங்கிறதால சீட் கொடுத்தோம்.. தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வக்குமார் ஓகேன்னு சொல்லிட்டாரு..

எஸ்டிபிஐ (SDPI), செளத்ல கடையநல்லூர், பாளையங்கோட்டை, டெல்டாவுல பாபநாசம் தொகுதிகளில்ல ஒன்னை கேட்டாங்க.. பாளையங்கோட்டை எல்லாம் எப்பவும் திமுக ஜெயிக்கிற தொகுதி.. இருக்கிற சூழ்நிலையை வெச்சு நன்னிலம் கொடுத்தோம்.. அவங்க வேற தொகுதி கொடுங்கன்னு சொல்றாங்க” என்றனர்.

ADVERTISEMENT

எஸ்டிபிஐ கட்சி தரப்பில் விசாரிச்சப்ப, “கடையநல்லூர், பாளையங்கோட்டை கொடுத்திருந்தா நல்லா இருந்துருக்கும்.. டெல்டாவுல பாபநாசமும் கேட்டோம்.. நன்னிலம் கொடுக்கிறதா சொன்னாங்க..

நன்னிலம் தொகுதியில முன்னாள் அமைச்சர் காமராஜ் போட்டியிடுகிறாரு.. அவரு 3 முறை ஹாட்ரிக் அடிச்ச தொகுதி.. ‘செல்வ’ பலம் படைச்சவரு.. அவரை எதிர்த்து நாங்க சமாளிக்க முடியாதுங்குற சந்தேகத்துலதான் வேற மாத்தி கொடுங்கன்னு கேட்டோம்..

எங்களுக்கு அரவக்குறிச்சி கூட கொடுங்கன்னு கேட்டோம்.. திமுக சைடுல, “அரவக்குறிச்சி ஓகேதான்.. ஆனா அண்ணாமலை அங்கே நின்னா போட்டி டஃப் ஆகுமேன்னு” சொன்னாங்க.. அதனால பட்டுக்கோட்டை தொகுதியையும் கேட்டோம்.. ஒரு கட்டத்துல கமல் மாதிரி வெளியே இருந்து ஆதரவு தரலாம்னு கூட யோசிச்சோம்” என்றனர்.

எஸ்டிபிஐயின் இந்த மூவ்களைத் தொடர்ந்து சிஎம் ஸ்டாலினும் முபாரக்கிடம் பேசியிருக்காரு..

இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, ”எஸ்டிபிஐக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்னு நினைக்கிறவர் ஸ்டாலின்.. ஏன்னா தன்னோட கொளத்தூர் தொகுதியில மற்ற முஸ்லிம் கட்சிகளைவிட எஸ்டிபிஐ இளைஞர்கள் அதிகமாக இருக்கிறாங்கன்னு சொல்லி இருக்கிறாரு.. அதனாலதான எஸ்டிபிஐ-ம் கூட்டணியில இருக்கனும்னு விரும்பினாரு…

இப்பவும் கூட நன்னிலம் தொகுதியை ஏற்க ரொம்ப தயங்குறாங்க.. ஆனா, “நீங்க தைரியமா நன்னிலத்துல நில்லுங்க.. அமைச்சர் நேரு- பூண்டி கலைவாணன் எல்லாரும் இருக்காங்க.. உங்களை ஜெயிக்க வைக்கிறது எங்க பொறுப்பு”ன்னு உறுதிமொழி கொடுத்ததோட, “பூண்டி கலைவாணன்கிட்ட எஸ்டிபிஐ வேட்பாளரை ஜெயிக்க வைச்சாதான் அமைச்சர் பொறுப்பு”ன்னும் கண்டிப்பா சொல்லி இருக்கிறார்” என்றனர்.

சிஎம் ஸ்டாலினும் உறுதி மொழி கொடுத்திருக்கிறதால, நன்னிலம் தொகுதியை ஏத்துகிட்டு போட்டியிடலாம்”னு எஸ்டிபிஐ ஆலோசனை நடத்துறாங்க என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share