டிஜிட்டல் திண்ணை:’ஸ்டாலின் கணக்கு’.. கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்.. இறுதியாகும் தொகுதி பங்கீடு!

Published On:

| By Mathi

DMK Alliance DT

வைஃபை ஆன் செய்ததும், “கூட்டணிக்கு தலைமை தாங்குறதுன்னா சும்மாவா”ன்னு சொன்னபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்..

என்னய்யா… எந்த கூட்டணியை பத்தி?

ADVERTISEMENT

திமுக கூட்டணியில தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ரொம்பவே ஜரூரா நடந்துகிட்டு இருக்கு..

திமுக கூட்டணியில காங்கிரஸுக்கு 28 சீட், முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 சீட் கொடுத்து ஒப்பந்தம் போட்டாட்ச்சு.. தேமுதிகவுக்கு 10 சீட்டுன்னும் சொல்லியாச்சு..

ADVERTISEMENT

மொத்தம் 234 தொகுதிகளில்ல 40 சீட் ஒதுக்கியாச்சு.. 194 சீட் மிச்சம் இருக்கு.. இதுல திமுக மட்டும் 170 சீட் நிக்கனும்னு நினைக்கிறாரு ஸ்டாலின்..

”170 சீட்டுல திமுக நின்னா 70% இடங்களில் வெற்றி கிடைக்கும்..அதாவது130 சீட் ஜெயிக்க முடியும்”னு கணக்கு போடுறாராம் ஸ்டாலின்..

ADVERTISEMENT

அப்படின்னா மிச்சம் இருக்கிறது 24 சீட்தான்.. இதைத்தான் விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுகவுக்கு பிரிச்சு கொடுக்கனும்..

போன 2021-ல் 4 கட்சிகளுக்கும் தலா 6 சீட் கொடுத்தது திமுக.. ஆனா இந்த முறை அப்படி கொடுக்க முடியலை.. ஏன்னா விசிக அதிக இடங்களை எதிர்பார்க்குது..

திமுகவுடன் போன வாரம் அறிவாலயத்துல திருமாவளவன் தலைமையிலான விசிக குழு பேச்சுவார்த்தை நடத்துச்சு.. அதுல, ”இத்தனை தொகுதிதான் வேணும்னு உங்க கிட்ட நாங்க கேட்கலை.. 2011-ல் எங்களுக்கு 12 சீட் கொடுத்தீங்க.. 2021-ல் அதிகமான சீட் கேட்டோம்.. ஆனா கடுமையான நெருக்கடி இருக்குது.. அதனால இவ்வளவு சீட்தான்னு சொன்னீங்க.. நாங்களும் சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு நீங்க கொடுத்து 6 சீட்டுல நின்னு 4-ல் ஜெயிச்சோம்.. அதுல 2 பொதுத் தொகுதிகள்..

2026-ல் இன்னைக்கு நாங்க வளர்ந்திருக்கோம்..அதுக்காக நாங்க உங்ககிட்ட பேரம் பேசலை.. நீங்கதான் நல்ல முடிவா சொல்லனும்”னு விசிக குழு சொன்னது..

இதை கேட்ட திமுக குழுவும், ”சரி தலைவர்கிட்ட பேசிட்டு சொல்றோம்”னு சொன்னாங்க.. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு விசிக வெயிட்டிங்..

திமுக தரப்பில் விசாரித்தால், “ தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்ததால விசிக அதைவிட கூடுதலா எதிர்பார்க்கிறாங்க.. அதனாலதான் போன டைம் மாதிரி எல்லோருக்கும் 6 சீட்டுன்னு கொடுக்க முடியலை” என்கின்றனர்.

சிபிஐ கட்சியும் 2 முறை அறிவாலயத்துல பேச்சுவார்த்தை நடத்துச்சு.. அப்ப, “போன டைம் கொடுத்த மாதிரி 6 தொகுதிகள் இந்த டைம் கொடுக்க முடியலை.. புதுசா கட்சிகள் வந்துருக்கு.. நாங்களும் இடங்களை குறைச்சிருக்கோம்.. நீங்களும் இந்த முறை 4 இடத்தில் போட்டியிடுங்க”ன்னு திமுக குழு சொன்னது.

ஆனா சிபிஐ குழுவோ, “4 இடங்கள் அப்படிங்கிறது ரொம்ப குறைவு.. போன டைம் போட்டியிட்ட இடங்களையாவது மீண்டும் கொடுக்கனும்.. அப்படி இல்லைன்னா 5 சீட்டாவது எதிர்பார்க்கிறோம்”னு சொல்லிட்டு வந்தாங்க..

அறிவாலயப் பேச்சுவார்த்தையில சிபிஐ 5 சீட் கேட்ட தகவலால் சிபிஎம் தோழர்கள் ஆதங்கப்பட்டனராம்.

இதுக்கு அப்புறமா சிபிஎம் குழு அறிவாலயத்துக்கு போ பேச்சுவார்த்தை நடத்துனாங்க.. அப்ப, “போன முறை போட்டியிட்ட 6 தொகுதிகளைவிட கூடுதலா வேணும்”னு சொல்லி இருக்காங்க

ஆனா திமுக குழு, “6 இடங்களை இந்த முறை ஒதுக்க முடியாத நிலையில இருக்கிறோம்.. நிறைய கட்சிகள் வந்துருக்காங்க”ன்னு நிலைமையை சொல்லி இருக்காங்க..

திமுக தரப்பில் சிபிஎம்-க்கும் 5 தொகுதிகளை ஒதுக்கலாம்னு நினைக்கிறாங்க.. ஆனால் சிபிஎம் தோழர்களோ, 6 தொகுதிகளாவது வேணும்னு ‘ஒத்தகால்ல’ நிக்கிறாங்களாம்..

மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கிட்டாங்களே?

மதிமுக தொடக்கத்துல, “எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கனும்னா 12 தொகுதிகளில்ல தனிச் சின்னத்துலதான் போட்டியிடனும்”னு சொன்னது..

மதிமுகவுல, டாக்டர் ரொக்கையா (மணப்பாறை),
திமு ராஜேந்திரன் (கடையநல்லூர்), பூமிநாதன் (மதுரை தெற்கு தொகுதி), பொருளாளர் செந்திலபதிபன் (கடலூர் மாவட்டத்துல ஒரு தொகுதி), அவைத் தலைவர் அர்ஜூனராஜு (பல்லடம்) சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் (சாத்தூர்), விநாயகம் ரமேஷ் (கோவில்பட்டி).. டெல்டா மாவட்டங்களில்ல ஆடுதுறை முருகன்.. இவங்களை எல்லாத்துக்கும் சீட் கொடுக்கனும்னு வைகோ லிஸ்ட் போட்டு வெச்சிருந்தாராம்..

இத்தனை பேருக்குமே வைகோவால போட்டியிட வாய்ப்பு தர முடியுமாங்கிறது சந்தேகம்தான் இருந்துச்சு..

திமுகவுடன் மதிமுக குழு பேச்சுவார்த்தை நடத்துனப்ப, ” இந்த டைம் 4 தொகுதிகள் கொடுக்கிறோம்.. அந்த 4 தொகுதிகளிலும் போன டைம் மாதிரி உதயசூரியன் சின்னத்துல நில்லுங்க”ன்னு திமுக தரப்புல சொல்லி இருக்காங்க..

12 தொகுதிகளைக் கேட்ட மதிமுகவுக்கு 4-தான் முடியுங்கிற மாதிரி திமுக சொன்னதால இன்னைக்கு கட்சியோட அவசர உயர்நிலைக் குழு கூட்டத்தை வைகோ கூட்டியிருந்தாரு.. இந்த கூட்டத்துல வைகோ பேசுறப்ப, ”நமக்கு 4 சீட்தான் தருவோம்னு சொல்லி இருக்காங்க.. உதயசூரியன்லதான் நிக்கனும்னு சொல்றாங்க.. நான் சிஎம்கிட்ட பேசி 5 சீட்டாவது வாங்க முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன்..

கடந்த காலங்களில்ல தேர்தல் நேரத்துல நாம சில முடிவுகள் எடுத்து அது தப்பா போயிருக்கு.. தேர்தல் புறக்கணிப்பு கூட செஞ்சிருக்கோம்..

நான் நினைக்கிறது என்னான்னா, இன்னைக்கு மதவாத பாஜக உள்ளே நுழைய தயாரா இருந்துகிட்டு இருக்கு… நாம எடுக்கிற எந்த முடிவும் அதுக்கு சாதகமாக போகக் கூடாது என்பதுதான்.. அதனால 5 சீட் வரை சிஎம்கிட்ட கேட்கிறேன்.. அவங்க சொல்ற மாதிரி 4 உதயசூரியன் சின்னத்துலேயும் ஒன்னு நம்ம தீப்பெட்டி சின்னம் மாதிரி சொந்த சின்னத்துலேயும் நிக்கலாம்.. நம்ம கட்சியின் 5 தோழர்களாவது சட்டசபைக்குள் இருக்கட்டுமே.. இந்த கட்சிக்காக இத்தனை வருஷம் உழைச்சிருக்காங்க.. அவங்களும் சட்டசபைக்குள் போகட்டும்”னு உருக்கமாகவும் யதார்த்தமாவும் பேசுனாரு..

இதுக்கு அப்புறமா சொன்னபடியே வைகோவும் 5 சீட்டுக்கு ரொம்பவே பேசிப் பார்த்தாரு.. ஆனா திமுக தரப்புல நெருக்கடியை சுட்டிக்காட்டி முடியலையேன்னு சொல்லி இருக்காங்க..

அப்ப துரை வைகோ எம்.பி ரெண்டு பக்கமும் பேலன்ஸா பேசினாரு…

இதுக்கு அப்புறமாதான் மதிமுகவுக்கு மொத்தம் 4 சீட் ஒதுக்கி இருக்காங்க இதுல 3 இடத்துல உதயசூரியன் சின்னத்துல, 1 இடத்துல சொந்த சின்னத்துல நிக்கவும் ஒப்புகிட்டாங்க.. வைகோவும் சுமூகமாக உடன்பாடி முடிஞ்சிருச்சுன்னு மகிழ்ச்சியை தெரிவிச்சிருக்காரு..

இதுவரை நடந்த பேச்சுவார்த்தை நிலைமைகளைப் பார்த்தா

இப்ப கூட்டணி கட்சிகளுக்கான 24-ல் 4 மதிமுகவுக்கு ஒதுக்கியாச்சு.. எஞ்சி இருப்பது 20.. இதில் சிபிஐ 5, சிபிஎம் 6, விசிக 9-ன்னு முதல்வர் ஸ்டாலின் விருப்பப்பட்டால் முடிக்க வாய்ப்பிருக்கிறது..

திமுக கூட்டணியில இப்படித்தான் தொகுதி பங்கீடு முடியும் போல..

தனிச்சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள்

காங்கிரஸ் 28
தேமுதிக 10
விசிக 9
சிபிஐ 5
சிபிஎம் 6
முஸ்லிம் லீக் 2

உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் கூட்டணி கட்சிகள்

மதிமுக 4
மக்கள் நீதி மய்யம் 2
கொமதேக 2
மமக 2
தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1
ஆதித் தமிழர் பேரவை 1
எஸ்டிபிஐ (SDPI)1
முக்குலத்தோர் புலிப்படை1
மனித நேய ஜனநாயக கட்சி1
புதிய திராவிட கழகம் -1
தமிழர் தேசம் கட்சி -1
மூவேந்தர் முன்னேற்ற கழகம்- 1

திமுக மட்டும் 156 இடங்கள்னு முடியலாம்னு சொல்றாங்க.. அதே நேரத்துல திமுக கூட்டணிக்கு புதுசா வந்த 9 கட்சிகளில்ல ஒன்றிரண்டுக்கு சீட் கொடுக்காமலும் இருக்க வாய்ப்பிருக்குன்னும் சொல்றாங்க என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share