வைஃபை ஆன் செய்ததும், “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்பதெல்லாம் ரொம்ப சரியாதான் இருக்கு போல என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
எதுக்குய்யா இந்த தத்துவ மொழி?
நடப்பு அரசியலுக்கு நச்சுன்னு பொருந்துதோ.. நமக்கு தெரியலை.. மனசுல பட்டதை சொன்னேன்யா..
எலக்ஷன் நேரத்துல மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனதுக்கு பின்னாடி ஸ்டாலின்தான் இருக்காருன்னு ரொம்பவே கோபத்துல இருக்கிறாராம் விஜய்..
அப்ப திரிஷா கூட ஒரே காரில ஒரே கலர் டிரஸ்ல ஜோடியா கல்யாணத்துக்கு விஜய் அழைச்சுட்டு போனதுக்கு யாரு காரணமாய்யா?
யோவ்.. உமக்கு குசும்பு அதிகம்யா.. விஷயத்துக்கு வருவோம்யா.. இப்படி விஜய், திமுக மேல இருக்கிற கோபம்தான் நல்ல சான்ஸ்னு அமித்ஷா டீம் மறுபடியும் களமிறங்கிருக்காம்.. விஜய்யை என்டிஏ கூட்டணிக்குள்ள எப்படியாவது கொண்டு வந்துடனும்னு அமித்ஷா தரப்பு ரொம்பவே சீரியசா முயற்சி செஞ்சுட்டு இருக்கிறதாம்..
இதை பத்தி அமித்ஷாவுக்கு நெருக்கமானவங்க கிட்ட பேசுனப்ப, “விஜய்யை கூட்டணிக்குள்ள கொண்டு வர்ற முயற்சியை அமித்ஷா முன்னாடி எடுத்தாரு.. அப்ப நடிகர் பவன் கல்யாண் மூலமா பேசிப் பார்த்தாரு.. அந்த டைம்ல விஜய் பிடி கொடுக்காததால ஒர்க் அவுட் ஆகலை..
அப்ப, ராகுல் காந்தி எப்படியும் தன்னோட கூட்டணிக்கு வந்துடுவாருன்னு விஜய் ரொம்பவே எதிர்பார்த்துகிட்டு இருந்ததால பாசிட்டிவ்வா ரிப்ளை தராம இருந்தாரு..
அதனால பவன் கல்யாணும் இந்த முயற்சியை ஆஃப் செஞ்சுட்டாரு…
இப்ப ராகுல் காந்தி, ஸ்டாலினுடன் கூட்டணியை கன்ஃபார்ம் பண்ணிட்டாரு.. அதோட இல்லாம விஜய்க்கு எதிராக மனைவி சங்கீதா கோர்ட்டுக்கு போயிருக்காங்க..
இதனால மறுபடியும் பவன் கல்யாணையே அமித்ஷா களமிறக்கி பேச சொன்னாரு.. ஏன்னா விஜய்கிட்ட நேரடியாகவே பேசக்கூடியவர் பவன் கல்யாண்.. அதனால அவரையே மறுபடியும் அமித்ஷா பேச வெச்சிருக்காரு..
விஜய்கிட்ட, போன டைம் மாதிரி எல்லாம் அதிகமான சீட், டெபுடி சிஎம் போஸ்ட் எல்லாம் பவன் கல்யாண் பேசலை.. நேரடியாகவே, “கூட்டணிக்கு வந்துட்டீங்கன்னா நீங்க ரெண்டரை வருஷம் சிஎம்.. எடப்பாடி ரெண்டரை வருஷம் சிஎம்.. இதான் டீல்”னு சொல்லியிருக்காரு பவன் கல்யாண்..
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத விஜய் ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டாராம்.. அப்புறமா கொஞ்ச நேரம் பவன் கல்யாண்கிட்ட பேசுன விஜய், இந்த டீல் பத்தி பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்காரு” என்கின்றனர்.
விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “விஜய்யைப் பொறுத்தவரைக்கும் மனைவி பிரச்சனை ஒரு பக்கம்.. நிதி நெருக்கடியும் நிறைய.. அதோட, கூட்டணியே இல்லாம தனிச்சு போட்டியிடுறோமான்னு கட்சிக்குள்ளும் விரக்தி மனநிலை.. இப்படியான சூழ்நிலையில சிக்கி இருக்கிறாரு..
இப்படி இருக்கும்போதுதான் பவன் கல்யாண், “நீங்க ரெண்டரை வருஷம் சிஎம்”ன்னு ஆஃபர் கொடுத்திருக்காரு..
இந்த “ஆஃபர்” எப்படி இருக்கும்னு குளோஸ் சர்க்கிளில் விஜய் டிஸ்கஷனும் செஞ்சுகிட்டு இருக்காரு..
விஜய் குளோஸ் சர்க்கிளில,” இது நல்ல ஆஃபர்தானே.. இதைத்தானே நாம எதிர்பார்த்தோம்.. நாம நினைக்கிறதைத்தானே பவன் கல்யாண் சொல்லி இருக்காரு.. ஓகே சொல்லிடுவோம்”னு ஒருதரப்பு சொல்லி இருக்காங்க..
இன்னொரு செக்சனோ, “அப்படி எல்லாம் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துடாதீங்க.. உங்களுக்குன்னு இருக்கிற தனியான அடையாளம் அப்படிங்கிறதே இல்லாம போயிடும்”ன்னும் சொல்லி இருக்காங்க..” என்கின்றனர்.
சரிய்யா.. எடப்பாடி இதுக்கு ஓகே சொல்வாரா?
இதை பத்தி எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரங்களில விசாரிச்சோம்.. அப்ப, “அமித்ஷாவே எடப்பாடிகிட்ட விஜய்யை கூட்டணிக்குள்ள கொண்டு வர்றதை பத்தியும் ரெண்டரை வருஷம் சிஎம் போஸ்ட் டீல் பத்தியும் சொன்னாரு..
ஆனா எடப்பாடியோ, ”இல்லை.. இல்லை.. அதெல்லாம் வேண்டாம்.. இப்ப இருக்கிற கூட்டணியே நமக்கு போதும்.. நாம நிச்சயமாக ஜெயிச்சிட முடியும்..”னு சொன்னார்..
அதுக்கு “நம்ம கூட்டணியில விஜய் இருந்தா நாம ஸ்வீப் வின்னிங்தான்.. அதனால இதை பத்தி யோசிச்சு சொல்லுங்க”ன்னு அமித்ஷாவும் அழுத்தமா சொல்லி இருக்காரு..
இதுக்கு அப்புறம், எடப்பாடி பழனிசாமி குடும்பத்துல இருக்கிறவங்ககிட்ட அமித்ஷா இப்படி ஒரு டீல் சொல்லி இருக்காருன்னு சீரியசா டிஸ்கஷன் செஞ்சுகிட்டு இருக்காரு” என்றனர்.
இப்போதைக்கு ”ரெண்டரை வருஷத்துக்கு ஒரு சிஎம்” அப்படிங்கிற ஆப்ஷனை விஜய் ரொம்பவே சீரியசா யோசிக்கிறாரு.. எடப்பாடி தரப்பிலும் தீவிரமா டிஸ்கஷன் செய்யறாங்க.. ரெண்டு தரப்பும் என்ன முடிவு சொல்லும்னு அமித்ஷா வெயிட்டிங்கில இருக்கிறாரு.. அதனால அரசியல் களமே ரொம்பவே பரபரப்பா எதிர்பார்ப்போட இருக்குதய்யா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
