‘மாநாடுன்னா நேரு; நேருன்னா மாநாடு’.., ஸ்டாலின் புகழாரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK

திருச்சியில் இன்று மார்ச் 9-ந் தேதி நடைபெற்ற திமுகவின் 12-வது மாநில மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சுமார் 10 லட்சம் திமுக நிர்வாகிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” இந்த மாபெரும் மாநில மாநாட்டை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் நம்முடைய அமைச்சர் ஆரூயிர் சகோதரர் திருச்சியின் தீரர் கே.என் நேரு.

ADVERTISEMENT

முதல்ல அவருக்குத் தலைவராக என்னுடைய சார்பிலும், மேடையில் இருக்கக்கூடிய தலைமைக் கழகத்தின் நிர்வாகிகள் சார்பிலும், என் எதிரில் இருக்கக்கூடிய உங்கள் அனைவரின் சார்பிலும் நம்முடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நம்ம நேரு கிட்ட மாநாடுன்னு சொல்லிட்டாலே போதும், அவருக்குள்ள ஒரு புதிய எனர்ஜி வந்துரும். நாம நினைக்கிறதை விட எப்போவும் பிரம்மாண்டமாகப் பண்ணுவதுதான் நேருவோட ஸ்டைல். அதனாலதான் நான் எப்போவும் சொல்றது ‘மாநாடுன்னா நேரு, நேருன்னா மாநாடு’. இப்ப கூட பாருங்க 200 ஏக்கர் இடத்தை தேர்ந்தெடுத்து 200 இடங்களில் வெல்லனும்னு குறிப்பாகத் தொண்டர்களுக்குச் சொல்லிட்டார்.

நமக்கு இந்த கிரவுண்ட்ட ரெடி பண்ணிக் கொடுத்துட்டார். இனிமே நாம தொடர்ந்து அடிச்சு ஆடணும். இந்த மாபெரும் மாநாட்டிற்காக அயராது உழைத்திருக்கக்கூடிய அவருக்கும், அவருக்குத் துணை நின்ற ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்” என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share